11318 மதமும் மார்க்சியமும் தமிழ்ப் பண்பாட்டுப் பார்வை.

ந.இரவீந்திரன். சென்னை 600 086: சவுத் விஷன், 132, அவ்வை சண்முகம் சாலை, புதிய இல. 251, கோபாலபுரம், 1வது பதிப்பு, 2006. (சென்னை 600 014: மகேந்திரா கிராப்பிக்ஸ்).

295 பக்கம், விலை: இந்திய ரூபா 80., அளவு: 21×13.5 சமீ.

விஞ்ஞானபூர்வச் சிந்தனைகள் பூமியில் மிகத் தீவிரமாக உள்வாங்கப்பட்டுவரும் இன்றைய காலகட்டத்தில் ஆன்மீக நிறுவனமான மதமும் அதற்குச் சமமாகத் தீவிரமாக உள்வாங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மதம், மார்க்சியம் என்ற இரண்டினதும் உண்மைச் சொரூபத்தை வாசகருக்கு உணர்த்துவதன் எத்தனிப்பாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நூலாசிரியர் சிறுகதைத் தொகுதி ஒன்று உட்பட இதுவரை 8 நூல்களை வெளியிட்டுள்ளார். பண்டத்தரிப்பு தாளையடி மறுமலர்ச்சி மன்றத்தின் ஊடாகப் பொதுப்பணிக்கு வந்தவர். முதுமாணிப் பட்டதாரியான இவர் புதிய ஜனநாயகக் கட்சியைச் சார்ந்த பொதுவுடைமைவாதி. தேசியக் கலை இலக்கியப் பேரவையின் செயலாளராகவும் பணியாற்றும் இவர் வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார். நுழைவாயில், மதம் குறித்த மறுமதிப்பீட்டின் அவசியம், மதங்கள், பண்பாட்டுத் தளத்தில் தமிழின் தனித்துவப் பங்களிப்புகள், மார்க்சிய நிலைப்பாட்டில் மதம், புதிய பண்பாட்டு எழுச்சி, தொகுப்புரைக்கு மாற்றாக, முடிவுரை ஆகிய எட்டு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50147).

ஏனைய பதிவுகள்