செல்வரத்தினம் சந்திரசேகரம், ஏ.எம்.முகமட் முஸ்தபா, தவம் சசிவதனி. ஒலுவில்: பொருளியல் துறை, தென் கிழக்குப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2013. (காத்தான்குடி: அல் ராபா, பிரதான வீதி).
(7), 134 பக்கம், வரைபடங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 400., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-44872-0-8.
கலாநிதி செல்வரத்தினம் சந்திரசேகரம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் முதுநிலை விரிவுரையாளராகவும், ஏ.எம்.முகமட் முஸ்தபா ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொருளியல், வர்த்தக முகாமைத்துவபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராகவும், செல்வி தவம் சசிவதனி ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொருளியல், சமூக விஞ்ஞானங்கள் துறையின் தற்காலிக விரிவுரையாளராகவும் பணியாற்றிய வேளையில் இந்நூல் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது. இதில் சுற்றுலா எண்ணக்கரு விளக்கம், சுற்றுலா இலக்கு மையம், சுற்றுலாத்துறையின் நிலைத்து நிற்கும் தன்மை, விருந்தோம்பல், சுற்றுலாவின் வகைகள், உலகளாவிய ரீதியில் சுற்றுலாத்துறை, இலங்கையின் சுற்றுலாத்துறை, இலங்கையில் சுற்றுலாத்துறையினால் ஏற்படும் பாதிப்புக்கள், இலங்கையில் சுற்றுலாத் துறைக்கான ஊக்குவிப்புகள் ஆகிய ஒன்பது இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 244257).