லிலந்தி குமாரி. கொழும்பு 12: இலங்கைச் சட்ட உதவி ஆணைக்குழு, இல. 129, மேல் நீதிமன்றக் கட்டடத் தொகுதி, 1வது பதிப்பு, 2010. (நாவல: எம்.ஜீ. பிரின்டர்ஸ் தனியார் நிறுவனம், இல. 29/2, நாரஹேன்பிட்டிய வீதி).
37 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
சமூகத்தில் பெண் உழைப்பாளிகளிடையே கணிசமானவர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பினை நம்பியவர்களாகக் காணப்படுகின்றனர். வீட்டுப்பணிப்பெண்களாக வெளிநாடு செல்லும் இவர்களிடத்தில் தமக்குரிய சட்டபூர்வமான பாதுகாப்பு பற்றியோ வேலை வழங்குநர்கள், முகவர்கள் போன்றோரின் அராஜகப் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலான சட்ட உதவியை அவர்கள் நாடுவது தொடர்பில் அறிவற்றவர்களாகவோ காணப்படுகிறார்கள். இதனால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளோ ஏராளம். இத்தகைய அறியாமையைப் போக்கும் வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்றுச் செல்லமுனையும் பெண்களுக்குள்ள சட்டபூர்வமான உதவிகள், ஆலோசனைகள் என்பவற்றை இந்நூல் தெளிவாக விளக்குகின்றது. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் ஆர்:- 14363).