11331 வெற்றிகரமான கதை: மன உறுதியுடன் விடாமுயற்சிகொண்டது.

டபிள்யூ.ஜீ. மித்ரரத்ன. அம்பாந்தோட்டை: ஜனசக்தி- மகளிர் அபிவிருத்தி ஒன்றியம், தங்கல வீதி, 1வது பதிப்பு, 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை).

31 பக்கம், விளக்கப் படங்கள், புகைப் படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×21.5 சமீ.

மகளிர் அபிவிருத்தி ஒன்றியத்தின் (1989-2002) பதின்மூன்று வருட விடாமுயற்சியின் கதையாக, அதன் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிய ஆவணத்தொகுப்பாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. மகளிர் அபிவிருத்திக்கான ஒன்றிய அமைப்பினதும் நிறவனத்தினதும் கட்டமைப்பு, மகளிர் அபிவிருத்திக்கான ஒன்றியத்தின் மேற்பார்வையும் முகாமைத்துவமும், ஜனசக்தி வங்கிகளும் அவற்றின் செயற்பாடுகளும், விவசாய அபிவிருத்தி செயற்பாடுகள், மந்தை வளர்ப்பு, சிறிய அளவிலான கைத்தொழில் அபிவிருத்தித் திட்டம், சிறிய அளவிலான வியாபாரம், தாய்-சேய் பாதுகாப்பும் சத்துணவுச் செயற்பாடுகளும், சூழலைப் பேணுதல், வயோதிபருக்கு உதவுதல், சிறுவர்களின் சங்கங்கள், போதைப் பொருள் பாவனைத் தடுப்பு நிகழ்ச்சித் திட்டம், திவிசரண சமூக பாதுகாப்பு திட்டம் ஆகிய 13 தலைப்புகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 87497). 

ஏனைய பதிவுகள்