மோகனவதனி ரவீந்திரன் (பிரதம ஆசிரியர்), விஜயகுமார் விஜயலாதன் (உதவி ஆசிரியர்). சுன்னாகம்: வாழ்வகம், விழிப்புல வலுவிழந்தோர் இல்லம், சபாபதிப்பிள்ளை வீதி, 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: Focus Printers).
(4), 36 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.
வாழ்வகம்- கண் பார்வையற்ற, பார்வைக் குறைபாடுடைய பிள்ளைகளின் வாழ்வை வளப்படுத்தும் ஒரு நிறுவனமாக 1988ம் ஆண்டு யூன் மாதம் 29ம் திகதி கலாநிதி அன்னலட்சுமி சின்னத்தம்பி அம்மையார் அவர்களால் தெல்லிப்பழை காசி விநாயகர் ஆலயத்திற்கு அருகில் தனியார் வீடொன்றில் 12 விழிப்புல வலுவிழந்த பிள்ளைகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. வாழ்வக நிறுவனமானது கடந்த 29 வருடங்களாக இலங்கை வாழ் தமிழ் பேசும் விழிப்புல வலுவிழந்த பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டுக்காகவும் அதன் ஊடான வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்காகவும் அயராது பாடுபட்டு வருகின்றது. நடைமுறையில் உள்ள கல்வி முறைகளுக்கமைவாக விழிப்புல வலுவிழந்த பிள்ளைகள் தமது கல்வியை பெற்றுக்கொள்ள வழி சமைத்து வரும் இந்நிறுவனமானது இலங்கையில் உள்ள ஒரேயொரு தனித்துவமான தொண்டு ஸ்தாபனமாக விளங்கி வருகின்றது. இந்நிறுவனத்தின் அதிகாரபூர்வ இதழாக மலர்ந்துள்ள விழி- வாழ்வக அன்னை துதி, வாழ்வக தாபகர் திருவுருவப்படம், தலைவரின் ஆசிச் செய்தி, வாழ்வக மாணவர் விபரம், நிர்வாகசபை அங்கத்தவர் விபரம், வருடாந்த நிகழ்வுகள், மாணவர் நலனோம்பு செயற்றிட்டங்கள், மாணவர் அடைவு மட்டம், உத்தேசத் திட்டங்கள், பதிவுகளும் பகிர்வுகளும், சிறப்புக் கட்டுரைகள் (எட்டாக் கனி, ஸ்ரீபன் ஹோக்கிங், விழியாய் வழிகாட்டிடும் சாதனங்கள், தஞ்சமான தர்மாலயம், வாழ்வகமும் நானும் – சொ.தர்மதன்), வாழ்வக கீதம் ஆகிய விடயதானங்களுடன் மலர்ந்துள்ளது.