செ.அருள்மொழி. மட்டக்களப்பு: சிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை, செங்கலடி, 1வது பதிப்பு, ஜனவரி 2009. (சாய்ந்தமருது 9: ரோயல் ஓப்செட் பிரின்டர்ஸ், பிரதான வீதி).
vii, 217 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-1443-64-1.
மதிப்பீடு பற்றிய அறிமுகம் (அளவீடு, கணிப்பீடு, அளவீட்டின் வழுவும் வகையும், மதிப்பீட்டின் இயல்புகள், மாணவர் மதிப்பீட்டுச் செய்முறையின் பிரதான கட்டங்கள், மதிப்பீட்டின் வகைகள், மதிப்பீடு செய்யப்படவேண்டிய பரப்பு), கல்வியின் இலக்குகளும் நோக்கங்களும் (கல்வியின் குறிக்கோளை வரையறை செய்தல், பொருத்தமான கல்விக் குறிக்கோளினால் ஏற்படும் நன்மைகள், வகுப்பறை செயற்பாட்டில் விஷேட குறிக்கோளை ஏற்படுத்தல், கல்விக் குறிக்கோளின் பகுப்பியல்), அறிவு-எழுச்சி-உள இயக்க வளர்ச்சியினை அளவிடும் நுட்பங்கள் (அறிவசார் வளர்ச்சியினை அளவிடும் நுட்பங்கள், எழுச்சிசார் வளர்ச்சியினை அளவிடும் நுட்பங்கள், உள இயக்க வளர்ச்சியினை அளவிடும் நுட்பங்கள்), கல்வி அளவீடுகளில் பயன்படுத்தப்படும் புள்ளிவிபரவியல் முறைகள் (மையநாட்ட அளவை, விலகல் அளவைகள்) ஆகிய நான்கு பிரதான அலகுகளின் வழியே கற்றலின் அளவீடு பற்றியும் அதனை மதிப்பீடு செய்வது பற்றியும் இந்நூல் விளக்கமளிக்கின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61527).