சதாசிவம் அமிர்தலிங்கம். ஹற்றன்: திருமதி பாலசுசிலேன்மணி அமிர்தலிங்கம், 32/15A, 2ம் ஒழுங்கை, டிம்புள்ள வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2015. (யாழ்ப்பாணம்: ஷாம்பவி பதிப்பகம்).
iv, 151 பக்கம், xxi, அட்டவணைகள், விலை: ரூபா 300., அளவு: 20.5×14 சமீ.
கல்வியியற் புலம்சார்ந்த 16 கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. ஆசிரியர் தொழில்வாண்மை விருத்தியில் அதிபரின் வகிபாகம், தேசிய கல்வியியற் கல்லூரிகளின் எதிர்காலம், செயற்பாடு சார்ந்த கற்றல் கற்பித்தலின் போது தர உளளீடுகளின் பயன்பாடு, அதிபரின் வேலைப் பகிர்வும் ஆசிரியரின் ஊக்குவிப்பும், ஆசிரியரும் விசேட உதவி தேவைப்படும் பிள்ளைகளும், கற்றலும் வழிநடத்தலும், பாடசாலையில் அதிபரின் வகிபங்கும் பங்களிப்பும், கணிதம் கற்றலும் ஸ்கெம் என்பவரின் கருத்துக்களும், ஆய்வும் ஆய்வை மேற்கொள்ளும் வழிமுறைகளும், ஆசிரியர் கல்வியும் அதனை வழங்கும் நிறுவனங்களும், இலங்கையின் கல்விச் சட்டப் பிரயோகங்களில் 13ஆவது திருத்தச் சட்டம், பாடசாலை மட்ட ஆசிரியர் அபிவிருத்தி (SBTD), தமிழர் வாழ்வுடன் கணிதம் ஒன்றிணைந்த விதம், ஆசிரியரது வகை கூறலின் முக்கியத்துவம், தேசிய கல்விக் கல்லூரிகளின் தேவைப்பாடுகளும் க.பொ.த. (உ/த), க.பொ.த.(சா/த) மாணவர்களும், நேர முகாமைத்துவம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளை இந்நூல் கொண்டுள்ளது.