ஆ.பேரின்பநாதன். யாழ்ப்பாணம்: கலைமகள் கொம்பியூட்டர் பிரிண்டர்ஸ், இல. 214/23, சேர். பொன் இராமநாதன் வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, நவம்பர் 2009. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14 டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
xxxii, 188 பக்கம், அட்டவணைகள், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 20.5×14 சமீ.
கல்வி பற்றிய மரபார்ந்த சிந்தனைகளை, கல்வியினால் எங்கள் சமூகம் கண்ட உயர்வான மேன்மைகளை அடிக்கோடிடும் அதே வேளை இன்று எமது சமூகம் எதிர்கொள்கின்ற கல்விசார் பிரச்சினைகளையும் ஆழநோக்குகின்றது. பிள்ளைகளின் சுயத்தை மதிக்கின்ற, சமூகநலன் கொண்ட ஆளுமையாக அவர்களை வளர்த்தெடுக்கின்ற வல்லமை மற்றும் மன உறுதி கொண்ட பெற்றோர்-ஆசிரியர்களைக் கொண்ட கல்வியமைப்பு இத்தகைய உயர்-தனி இலக்கைக் காத்து மேம்படுத்துவதற்கான சமூகச் சூழமைவு இவற்றினைப் படைக்கும் காலப்பணி என்பவற்றை இந்நூல் வேண்டிநிற்கின்றது. வைத்திய கலாநிதி ஆ.பேரின்பநாதனின் நான்காவது நூல் இதுவாகும். (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் ஆர்:- 13353).