ஆனந்தமயில் நித்திலவர்ணன். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, யுஜீ 50, பீப்பிள்ஸ் பார்க், 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம்).
xiv, 110 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-658-030-07.
இந்நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார். பேண்தகு அபிவிருத்திக்கான கல்வி என்ற முதலாவது இயலில் வடமாகாணத்தின் பேண்தகு அபிவிருத்திக்கான சவால்களும் அவற்றை எதிர்கொள்வதற்கான பொருத்தமான கல்வி முறைகளைக் கண்டறிதலும் என்ற விடயம் ஆராயப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாற்றமுறும் க.பொ.த. உயர்தரக் கல்வி என்ற பிரிவில் க.பொ.த. உயர்தரத்தில் தொழில்நுட்பவியல் பாடத்துறையின் அறிமுகம், வாழ்க்கை விருத்திச் செயற்றிட்டங்கள் என்பன பற்றி தெளிவாக்கப்பட்டுள்ளன. கல்வியும் ஆசிரியர்களும் என்ற பிரிவில் ஆசிரியத்தின விழாக்களும் ஆசிரியத் தொழிலும் பற்றியும் ஆசிரியர்களும் வாண்மை விருத்தியும் என்ற விடயம் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. சமூகத்துக்கான கல்வி என்ற பிரிவில் வாசிப்பும் சமூக மேம்பாடும், இளைய சமுதாயமும் வழிகாட்டல் ஆலோசனையும் என்பன பற்றி விளக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது இயல் கல்விசார் ஆராய்ச்சிக் கட்டுரைகள் பற்றியதாகும். இதில் இலங்கையில் தமிழ் கற்றல்- கற்பித்தல் தற்கால நடைமுறைகளும் சவால்களும், வடமராட்சி வடக்கு பிரதேசத்தின் தற்கால கல்வி அபிவிருத்திப் போக்குகள் ஆகியன பற்றி விரிவான கட்டுரைகள் காணப்படுகின்றன. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் ஆர்:- 14368).