த.கலாமணி. பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஏப்ரல் 2013. (யாழ்ப்பாணம்;: மதி கலர்ஸ், முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).
viii, 124 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 350., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-4676-03-9.
பாடசாலையில் பிடிமானம் கொண்ட யாவருக்கும் கல்வி மாற்றங்கள் குறித்தும் கல்விப் போக்கு குறித்தும் அடிப்படை அறிவு அவசியம். இந்நோக்கிலேயே, இன்று கல்வி உலகில் நிகழும் மாற்றங்களை ஒட்டியதாய் அவ்வப்போது எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. மாற்றம் காணும் உலகுடன் இணைதல்: கல்வியியற் கண்ணோட்டம் ஒன்றுக்கான அறிமுகம், முழுத்தரக் கல்வியின் சில அடிப்படைகள், ஆசிரியவாண்மை விருத்தியில் செயல்நிலை ஆய்வின் வகிபங்கு, வாண்மை விருத்தியும் அதிபர் வகிபாகமும்: சில புதிய பிரதிமைகள், ஆரம்பப் பிள்ளைப் பருவமும் மொழித்திறன் விருத்தியும், வாழ்க்கைத் தொழில் வழிகாட்டலும் மிருதுமுறைத் திறன்களும், ஆராயும் அறிவே விஞ்ஞானமாக: விஞ்ஞானக் கல்வி பற்றிய ஓர் உசாவல், அறநெறி வழிகாட்டல், சுயகற்றல் திறன்களை மேம்படுத்தல், கணிதக் கல்வி: சில உளவியல் அடிப்படைகள், கல்விச் சீர்மியமும் பன்முக நுண்மதியும், ஆசிரியர்களும் உளநெருக்கீடும்: சில அவதானிப்புகள், பாடசாலைக் கலாசாரம், பாடசாலை மேம்பாடும் பெற்றோர் பங்களிப்பும், கணிதத்தின் முறைசார் குறியீடுகளுக்கும் அப்பால்: கணிதக் கல்வியில் மொழியின் வகிபாகம் பற்றிய சில குறிப்புகள் ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இது ஜீவநதி பதிப்பகத்தின் கல்வியியல் சார்ந்த முதலாவது நூலாக வெளிவரும் 22ஆவது ஜீவநதி வெளியீடாகும்.