11351 மாற்றம் காணும் கல்வி உலகுடன் இணைதல்.

த.கலாமணி. பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஏப்ரல் 2013. (யாழ்ப்பாணம்;: மதி கலர்ஸ், முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

viii, 124 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 350., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-4676-03-9.

பாடசாலையில் பிடிமானம் கொண்ட யாவருக்கும் கல்வி மாற்றங்கள் குறித்தும் கல்விப் போக்கு குறித்தும் அடிப்படை அறிவு அவசியம். இந்நோக்கிலேயே, இன்று கல்வி உலகில் நிகழும் மாற்றங்களை ஒட்டியதாய் அவ்வப்போது எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. மாற்றம் காணும் உலகுடன் இணைதல்: கல்வியியற் கண்ணோட்டம் ஒன்றுக்கான அறிமுகம், முழுத்தரக் கல்வியின் சில அடிப்படைகள், ஆசிரியவாண்மை விருத்தியில் செயல்நிலை ஆய்வின் வகிபங்கு, வாண்மை விருத்தியும் அதிபர் வகிபாகமும்: சில புதிய பிரதிமைகள், ஆரம்பப் பிள்ளைப் பருவமும் மொழித்திறன் விருத்தியும், வாழ்க்கைத் தொழில் வழிகாட்டலும் மிருதுமுறைத் திறன்களும், ஆராயும் அறிவே விஞ்ஞானமாக: விஞ்ஞானக் கல்வி பற்றிய ஓர் உசாவல், அறநெறி வழிகாட்டல், சுயகற்றல் திறன்களை மேம்படுத்தல், கணிதக் கல்வி: சில உளவியல் அடிப்படைகள், கல்விச் சீர்மியமும் பன்முக நுண்மதியும், ஆசிரியர்களும் உளநெருக்கீடும்: சில அவதானிப்புகள், பாடசாலைக் கலாசாரம், பாடசாலை மேம்பாடும் பெற்றோர் பங்களிப்பும், கணிதத்தின் முறைசார் குறியீடுகளுக்கும் அப்பால்: கணிதக் கல்வியில் மொழியின் வகிபாகம் பற்றிய சில குறிப்புகள் ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இது ஜீவநதி பதிப்பகத்தின் கல்வியியல் சார்ந்த முதலாவது நூலாக வெளிவரும்  22ஆவது ஜீவநதி வெளியீடாகும்.

ஏனைய பதிவுகள்

Slotsmines Local casino

Blogs Five Reasons why you should Allege No-deposit Totally free Spins Inside Southern Africa Simple tips to Allege Their 100 percent free Revolves Limited time