11353 விசேட கல்வி அறிமுகமும் பிரயோகங்களும்.

தம்பிராசா சிவகுமார். சுன்னாகம்: திருமதி சியாமளா சிவகுமார், பொக்கணை வீதி, ஊரெழு மேற்கு, ஊரெழு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2007. (யாழ்ப்பாணம்: குரு பிரிண்டர்ஸ், 39/2 ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).

ix, 218 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ.

நூலாசிரியர் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரியின் விசேட கல்வித்துறை விரிவுரையாளர். விசேட தேவையுடைய பிள்ளைகளின் உணர்வுகளைச் சரியாகப் புரிந்துகொண்டு, அதை மதித்து அவர்களுடைய ஆற்றல்களை வளர்க்கவும் ஆளுமைகளை விருத்தியாக்கவும் வழிவகுக்கும் வகையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நூல் விசேட கல்வியும் விசேட உதவி தேவைப்படும் பிள்ளைகளும், விசேட கல்வி வரலாறும் வளர்ச்சியும், விசேட கல்வி ஆணைக்குழு அறிக்கைகள், சிறுவர் உரிமைகள் சாசனமும் விசேட கல்வியும், விசேட உதவி தேவைப்படும் பிள்ளைகளின் வகைப்பாடு, மீத்திறனுடைய பிள்ளைகள், மெல்லக் கற்கும் மாணவர்கள், விசேட தேவையுடைய பிள்ளைகள் எதிர்கொள்ளும் நெருக்கீடுகள், பிள்ளைகள் கற்பதில் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மங்கோலிய ஊனம், நுண்மதி, துறுதுறு குழந்தைகள், பார்வைக் குறைபாடுடைய குழந்தைகள், கேட்டல் குறைபாடுடைய பிள்ளைகள், பிள்ளை வளர்ச்சி, மன வளர்ச்சிக்குறை, மூளைவாதம், பிழையான சீராக்கம் பெற்ற பிள்ளைகள், ஆக்கத்திறனுடைய பிள்ளைகள், மனவெழுச்சி வெளிப்பாடுகள், காக்கை வலிப்பு, பேச்சுக்குறைபாடுடைய பிள்ளைகள், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் விசேட கல்வித் துறையில் புதிய செயற்றிட்டங்களும் செய்நிலை ஆய்வுகளும் ஆகியவை உள்ளிட்ட 31 விடயங்கள் தனித்தனி இயல்களாக இந்நூலில் விபரிக்கப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 8218 CC). 

ஏனைய பதிவுகள்

14557 அஞர்: சேரன் கவிதைகள்.

சேரன். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (சென்னை 600077: மணி ஓப்செட்). (14), 15-87 பக்கம், விலை: ரூபா 390., இந்திய ரூபா 100.00, அளவு: