ப.கா.பக்கீர் ஜஃபார். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 4வது பதிப்பு, 2014, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2003, 2வது பதிப்பு, நவம்பர் 2003, 3வது பதிப்பு, 2007. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை)
vi, 178 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 600., அளவு: 24.5×17.5 சமீ., ISBN: 978-955-659-443-0.
‘வெற்றிகரமான கற்பித்தல்: பாடத்தைத் திட்டமிடல்’ என்ற தலைப்பில் 2003 இல் வெளியிடப்பட்ட நூலின் மீள்பதிப்பு இது. பாட ஆயத்தம், கற்றல் மூலம் விருத்தி செய்யவிழையும் திறன்கள், திறன்களை வெளிக்காட்டும் நடத்தைகள், கற்பித்தலுக்கான நோக்கங்கள், கற்பித்தற் துணைகள், பாடத்தைத் திட்டமிடல், மாதிரிப் பாடத்திட்டங்கள், கற்பித்தல் மாதிரியுரு, புதிய கலைத்திட்டத்தில் 5E மாதிரி உரு ஆகிய அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்விப் பீடத்தில் கல்வியியல் பேராசிரியராக விளங்கும் இந்நூலாசிரியர், தேசிய கல்வியியல் நிறவனத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகமாகப் பணியாற்றிவருகின்றார்.