11356 உய்த்தறி  மலர் 1.

மலர் வெளியீட்டுக் குழு. கிளிநொச்சி: உயர்தர மாணவர் மன்றம், கிளிநொச்சி மகா வித்தியாலயம், 1வது பதிப்பு, மே 2012. (கிளிநொச்சி: வேழன் பதிப்பகம்).

x, 148 பக்கம், புகைப்படங்கள், வண்ணத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×20 சமீ.

மாறிவரும் உலகிற்கேற்ப தேடல் உள்ளங்கள் அனைத்தும் சகல விடயங்களையும் உய்த்தறிந்து கற்கவேண்டும் என்பது இந்நூலின் தலைப்பின் எண்ணக்கருவாகும். இம்மலரின் பொறுப்பாசிரியராக ந.ஜெயசுரேஷ் பணியாற்றியுள்ளார். இதழாசிரியர்களாக செ.நிரோஜினி, ந.பிரசாந்தன் ஆகியோர் இயங்கியுள்ளனர். தமிழர் பாரம்பரியங்களில் திருமணச்சடங்கு, சிவபூமியில் ஒரு சிவத்தலம் (திருக்கேதீச்சரம்), கணக்கீட்டு எண்ணக்கருக்கள், கணக்கீட்டு நியமங்கள், பெறுமதி சேர் வரி, கடனட்டைகள், வணிகத்துறையின் நவீன போக்கு, புதிய கம்பெனிச் சட்டத்தின் அறிமுகம், அப்பிள் பாவனையாளர்களின் அணையாவிளக்கு, கண்டங்கள் அசைகின்றன, கிரேக்க நாகரிகத்தின் சிறப்பம்சங்கள், விற்பனை நிலையமற்ற நவீனமயப்படுத்தப்பட்ட சில்லறை வியாபாரமுறைகள், இறைக் கொள்கையும் அரச நிதியும், கணக்கிட்டிற்கு ஓர் அறிமுகம்,  உறங்கிப்போன உறவுகள், ஈழத்து இந்துசமயப் பாரம்பரியத்தில் பௌத்தத்தின் பங்களிப்பு, பங்குச்சந்தை, கட்டுப்பாட்டுக் கணக்குகள், வாழ்க்கையின் இலட்சியம், நிதிச் சந்தைகள், ஓசோன் படைச் சிதைவுகள், புவி வெப்பமடைதலும் அதன் விளைவுகளும், இலாபநோக்கற்ற நிறுவனங்களின் நிதியறிக்கைகள், பூமி எப்பொழுது உருவானது, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், எல்லைக் கிரயக் கணக்கீடு, தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, இடப்பெயர்வுகளும் அவலங்களும், இலங்கைக் கணக்கீட்டு நியமம், கணினியின் உருவாக்கம், இன்றைய சூழலின் பெண் கல்வியின் முக்கியத்துவம், நாகரீகத்தின் வளர்ச்சி இன்றைய இளைஞர்களின் நிலையில் ஏமாற்றமா?, பிள்ளையின் ஆளுமையில் பெற்றோரின் செல்வாக்கு, சவால்களுக்கு பவுல், ஈபிஸ்னஸ், இலங்கைப் பல்கலைக்கழகங்களில் அனுமதி நடைமுறைகள், இலக்கியஉலா, காசுப்பாய்ச்சல் கூறு ஆகிய விரிவான தேடல்புலங்கள் சார்ந்த கட்டுரைகளை இம்மலர் உள்ளடக்கியுள்ளது.

ஏனைய பதிவுகள்