11359 தமிழோசை 1986.

பொ.செங்கதிர்ச்செல்வன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்:  தமிழ் மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1986. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம், 430, காங்கேசன்துறை வீதி).

xviii, 126 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் 1985இல் மீளமைக்கப்பட்ட தமிழ்மன்றத்தின் ஆய்விதழாக 1986இல் தனது முதலாவது இதழை வெளியிட்டிருக்கின்றது. இவ்விதழில் மிகப்பழைய இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் மூன்று: சில குறிப்புகள் (ஆ.வேலுப்பிள்ளை), ஈழத்தில் கண்ணகி வழிபாடு பற்றிய ஆய்வில் வன்னிப் பிரதேச நாட்டார் பாடல்கள் பெறும் முக்கியத்துவம் (இ.பாலசுந்தரம்), மாற்றுவகைக் கல்வித் தத்துவங்கள் (ப.சந்திரசேகரம்), சொற்பொருள் நிலையிற் செய்யுளும் யாப்பும் (நா.சுப்பிரமணியன்), குறைவிருத்தி நாடுகளின் இறைமை: சில சிந்தனைகள் (வி.நித்தியானந்தன்), வேத உபநிடதங்களில் அறிவாராய்ச்சியியற் கருத்துக்கள் (எஸ்.கிருஷ்ணராஜா), சங்ககாலம் பற்றிய புவியியற் சிநதனைகள் (செ.பாலச்சந்திரன்), இறை உறவில் மலரும் மறை (ஆர்.ஏ.ஜே.மத்தாயஸ்), இருக்கு வேதக் கவிதை: சில கருத்துக்கள் (வி.சிவசாமி), நம் தமிழ்மொழிக்கு வந்த சொற்களைச் செந்தமிழ் உருவிற் செப்பனிடுவோம் (கலாநிதி சண்முகநாதபிள்ளை), ஈழத்துத் தமிழ்ப் பெருங் காப்பியம் (பூ.ஹேமலதா), கெயின்ஸிய வேலைக்கோட்பாடும் குறைவிருத்தி நாடுகளின் பொருளாதாரத்தில் அதன் பிரயோகமும் (க.பரமசிவம்), இலங்கையின் பிரதிநிதித்துவ முறை வளர்ச்சி (ந.சுந்தரமூர்த்தி), ஓவியக் கலையிற் பெண்களின் பங்களிப்பு (அருந்ததி சபாநாதன்), சித்த மருத்துவம் (எஸ்.பவானி), திருமுறையிலே பண் (அ.சண்முகதாஸ்), தமிழ்நாட்டின் சமூக வரலாறும் இலக்கிய வரலாறும் (கா.சிவத்தம்பி), உடற் பருமனும் நீரிழிவு நோயும் (த.குகதாசன்), தமிழ்மொழி வரலாற்றில் உடம்படு மெய்யின் இடம் (பொ.செங்கதிர்ச்செல்வன்), பிரதிபலிப்புக்கள்: கவிதை (சுகந்தி சுப்பிரமணியம்), எனக்குப்பிடித்த ஒரு மாலையில் (முத்துலிங்கம்; மதியழகன்) ஆகிய படைப்புக்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10795).

ஏனைய பதிவுகள்