பதிப்புக்குழு. யாழ்ப்பாணம்: தமிழ் மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1987. (யாழ்ப்பாணம்: மேர்க்குரி அச்சகம், 40/1, நாவலர் வீதி).
vi, 128 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ.
1985இல் மீளமைக்கப்பட்ட தமிழ்மன்றத்தின் ஆய்விதழாக 1986இல் தனது முதலாவது இதழை பொ.செங்கதிர்ச்செல்வன் அவர்களை பதிப்பாசிரியராகக்கொண்டு வெளியிட்டிருந்தது. தொடர்ந்து 1987இல் இரண்டாவதாக இவ்விதழ் வெளிவந்துள்ளது. இவ்விதழின் பதிப்புக் குழுவில் சுப்பிரமணியம் சுகந்தி, சு.கோகுலதாசன், பொ.அருந்தவநாதன், பொ.செங்கதிர்ச்செல்வன் ஆகியோர் பணியாற்றினர். இந்த இதழில் இந்து வெளியிலிருந்து திருகோணமலை வரை தென்கீழ்த்திசை வழிவந்த பாசுபதம் (ஆ.வேலுப்பிள்ளை), நாட்டார் வழக்கியல் ஆய்வு நோக்கில் சங்ககால முருகனின் கருத்துப் படிவம் (இ.பாலசுந்தரம்), டானியல் இலக்கியங்களிற் பேச்சுமொழி (அ.சண்முகதாஸ்), ‘பா’ இயல்பும் உருவாக்கமும் (நா.சுப்பிரமணியன்), இலக்கியக் கலையில் அறிவியற் சிந்தனைகள் (க.நாகேஸ்வரன்), பாதுகாப்புச் செலவும் பொருளாதார அபிவிருத்தியும் (ந.பேரின்பநாதன்), இலங்கையில் முஸ்லிம் மக்களின் வளர்ச்சியும் செறிவும் (கா.குகபாலன்), யாழ்ப்பாண மாவட்டக் குடிசனத்தொகை மீள்பரம்பல்-சில திறமுறைகள் (பொ.பாலசுந்தரம்பிள்ளை), தமிழிலே தொன்னூற்றாறு வகை இலக்கிய வடிவங்கள் உண்டு எனும் மரபு பொருத்தமானதா? (பொ.அருந்தவநாதன்), தமிழும் கிமிழும் (ச.கலாநிதி), கண்ணன் என் காதலன் ஆண்டாளதும் நம்மாழ்வாரதும் உணர்ச்சி வெளிப்பாடுகள் (பூ.ஜெயமலர்), நாணயங்களிற் காணப்படும் இந்த விக்கிரக இயல் அம்சங்கள் (ப.கணேசலிங்கம்), பௌத்தத்தில் பிரத்யய் ஸமுத்பாதம் எனும் எண்ணக்கருவின் முதன்மையும் முக்கியத்துவமும் (அ.செல்வராதா), எழுத்துக்களின் பிறப்பு தொல்காப்பியம் நன்னூல் ஒப்பீடு (க.எழில்வேந்தன்), மெய்க்கீர்த்திப் பிரபந்த வளர்ச்சியும் அதன் தன்மைகளும் (பொ.செங்கதிர்ச்செல்வன்), AIDS (த.குகதாசன்), சங்ககாலம் பற்றிய புவியியற் சிந்தனைகள் -II (செ.பாலச்சந்திரன்), யதார்த்தங்கள்-கவிதை (சு.சுகந்தி) ஆகிய படைப்புக்கள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன.