மலர்க் குழு. கோப்பாய்: சரவணபவானந்த வித்தியாலயம், 1வது பதிப்பு, 2002. (கோப்பாய்: ஐங்கரன் பதிப்பகம், ஏ.ஜீ.ஏ. அலுவலக ஒழுங்கை).
80 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ.
கோப்பாய் சரவணபவானந்த வித்தியாலயம் 1926 நவம்பர் மாதத்தில் விஜயதசமியன்று ஆரம்பிக்கப்பட்டது. அதன் 75ஆண்டுக்கால வளர்ச்சியை பதிவுசெய்யும் வகையில் இப் பவளவிழா மலர் உருவாக்கப்பட்டுள்ளது. மலர்க்குழு உறுப்பினர்களாக திரு. க.இ.குமாரசுவாமி, திருமதி. ச.கனகரத்தினம், திருமதி. செ.சிவஞானரத்தினம், திருமதி பே.இரத்தினசிங்கம், திரு. செ.செல்வரத்தினம், திரு. ஐ.சிவலோகநாதன் ஆகிய அறுவரும் பணியாற்றியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28289).