மலர் வெளியீட்டுக் குழு. கொழும்பு 9: இந்து மன்றம், விவேகானந்த மகா வித்தியாலயம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2001. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(2), 50 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.
பாடசாலையில் நவராத்திர பூஜைக் காலங்களில் மாணவர்களால் தயாரிக்கப்பட்டு கன்னிப் பிரசுரமாக 26.10.2001 அன்று வெளியிடப்பட்ட சிறப்பு மலர். பாடசாலை அதிபராக திரு.தி.கணேசராஜா பணியாற்றிய காலத்தில் இத்திட்டம் செயலுறுப்பெற்றது. நூல்வெளியீட்டுக் குழுவில் திருமதி சா.பிரபாகரன், சோ.முரளி, செல்வி மே.கிருஷ்ணபிள்ளை ஆகியோர் பணியாற்றியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25452).