ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், ஸ்ரீநகரம், அளவோடை வீதி, இணுவில் மேற்கு, சுன்னாகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2012. (இணுவில்: கஜானந்த் பிறின்டேர்ஸ், மானிப்பாய்வீதி).
90 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20×14.5 சமீ.
வழிவழியாக வருகின்ற ஆன்மீக வாழ்க்கையில் பல்வேறு நடைமுறைகள் வழக்கில் உள்ளன. சடங்குகள், சம்பிரதாயங்கள் பல கைக்கொள்ளப்படுகின்றன. இவற்றின்போது பலவகையான பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. உபகரணங்களாக, சடப்பொருள்களாக, சேதனப் பொருட்களாக, உயிர்ப்பொருட்களாக, அலங்காரப் பொருட்களாக, நுகர்பொருட்களாக என்றிவை பலதிறத்தனவாக அமைகின்றன. ஆன்மீகத்துடன் தொடர்புடைய இத்தகைய அறுபது மங்கலப் பொருட்கள் பற்றிய விபரத் தொகுப்பு இது. ஆங்கிலத்தில் குறிப்புரைகளுடன் கூடியது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 54842).