11372 இல்லற மங்கலம்: பூர்வக் கிரியைகள்.

ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்).  யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், ஸ்ரீநகரம், அளவோடை வீதி, இணுவில் மேற்கு, சுன்னாகம், 1வது பதிப்பு, ஜனவரி 2016. (சுன்னாகம்: கஜாநந்த் பிரின்டர்ஸ், மானிப்பாய் வீதி, இணுவில்).

(2), 100 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.

பிறப்பு முதல் இறப்பு வரை இந்துக்களின் சகல சடங்குகள், கிரியைகள் பற்றிய விபரங்களின் தொகுப்பாக இந்நூல் மலர்ந்துள்ளது. அந்தணர்களுக்கான சம்ஸ்காரங்கள் எனப்படும் வைதிகக் கிரியைகள் பற்றியும் அந்தணர் அல்லாதோர் இல்லங்களில் நிகழும் எல்லா மங்கல நிகழ்வுகள் பற்றியும் இந்நூலில் விரிவாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இந்நூலிலுள்ள அந்தணர்க்கான கிரியா விளக்கங்கள் பலவும் மயிலணி சிவஸ்ரீ ஷ.சோமாஸ்கந்தக் குருக்கள் அவர்களின் நூல்களிலிருந்தும் அந்தணரல்லாதோர் கிரியைகள் பற்றிய பல விடயங்கள் இந்து சமயப் பிரசாரகர் நித்திய தசிதரன் ஆக்கத்தில் வெளிவந்த வாழ்வியல் சடங்குகள் என்ற நூலிலிருந்தும் பெறப்பட்டன.

ஏனைய பதிவுகள்