ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், ஸ்ரீநகரம், அளவோடை வீதி, இணுவில் மேற்கு, சுன்னாகம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2016. (சுன்னாகம்: கஜாநந்த் பிரின்டர்ஸ், மானிப்பாய் வீதி, இணுவில்).
(2), 124 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ.
இந்நூல் வைதீக அபரக் கிரியைகளின் முக்கியத்துவம், அவற்றின் விளக்கங்கள், மற்றும் ஆசௌச விபரங்கள் என்பவற்றை உள்ளடக்கி வெளிவந்துள்ளது. முன்னோர் கடன் (ஆரம்ப உரை), அபரக் கிரியைகள்-சில விளக்கங்கள், சில முக்கியமான விதிமுறைகள், இன்னும் சில தகவல்கள், சிரார்த்த நியமங்கள், அக்னி நிர்ணயம், கர்த்ரு க்ரமம், பிறப்பு, இறப்பு, தொடர்பான தீட்டுக்கள், ஐயம் தெளிதல் (ஆசௌச நடைமுறைகள்), முத்தல யாத்திரை (காசி யாத்திரை), கோத்திர ப்ரவரங்கள், சிரார்த்தம்- மண்டப அமைப்பு, அந்தியேஷ்டி-மண்டப அமைப்பும் பொருட் பட்டியலும், சபிண்டீகரணம்- மண்டப அமைப்பும் பொருட் பட்டியலும், நன்றி நவிலல் ஆகிய பிரிவுகளில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62099).