பாஸ்கரன் சுமன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xviii, 114 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-504-8.
ஆசிரியரின் தேர்ந்த ஆறு ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு. ஈழத்தின் திரௌபதை வழிபாட்டின் பரவல்: சமூக பண்பாட்டியல் ஆய்வு, அரவான் களப்பலி: தமிழகத்திலிருந்து ஈழத்துக்கான பண்பாட்டுக் கடத்துகை, பட்டாணி கோயில்: ஒரு பண்பாட்டு மீட்டெடுப்பு, அர்ச்சுனன் தவம்: இதிகாசத்திலிருந்து நாட்டார் களங்களை நோக்கிய நகர்வு, பேய்ச்சி: ஒரு பண்பாட்டுப் படிமலர்ச்சி, மலைகத் தமிழர் நாட்டார் பாடல்கள்: ஒரு வரலாற்று ஆவணம் ஆகிய தலைப்புக்களில் இந்த ஆய்வுகள் பதிவுக்குள்ளாக்கப்பட்டுள்ளன. முதல் ஐந்து கட்டுரைகளும் நாட்டார் வழிபாடு சார்ந்தவையாகவும், இறுதிக் கட்டுரை நாட்டார் பாடல்கள் சார்ந்ததாகவும் எழுதப்பட்டுள்ளது. ஆசிரியரின் முதலாவது நூல் இதுவாகும்.