11379 ஈழத்தமிழர் மரபான இசையும் நடனமும்.

பாலசுகுமார். மட்டக்களப்பு: அனாமிகா, இல. 48, பெய்லி முதலாம் குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, 2009. (சென்னை 14: ஜப்பொனிக்கா பிரின்டிங் மீடியா, 17, ஸ்ரீபுரம் இரண்டாவது தெரு, இராயப்பேட்டை).

80 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: இந்திய ரூபா 125., அளவு: 21×14 சமீ.

ஈழத்தமிழர்களின் தனித்துவமான அடையாளங்களாகப் பேசப்படும் கலைகளில் அவர்களது நடன முறையை வெளிப்படுத்தி இருப்பது கூத்து மரபாகும். இந்நூல் ஈழத்தமிழர் கூத்து, இசை, நடனம் தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது. ‘ஈழத் தமிழர்களின் மரபான இசையும் நடனமும்’ என்ற முதலாவது கட்டுரை ஜனவரி 2008இல் பிரான்சில் வெளியிடப்பட்ட பொங்கல் மலருக்காக எழுதப்பட்டது. ‘ஈழத் தமிழர்தம் கூத்து மரபுகள்’ என்ற இரண்டாவது கட்டுரை சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2009 அக்டோபர் திங்களில் நடைபெற்ற தமிழ் மரபுக் கலைகள் தொடர்பான தேசிய கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது. ‘இலங்கையின் மரபு வழித் தமிழ் நாடக அரங்கு’ என்ற மூன்றாவது கட்டுரை 1995இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட நாடக மலரில் இடம்பெற்றது. அரங்கியல் நூல்களை வெளியிடும் அனாமிகா பதிப்பகத்தின் 14ஆவது வெளியீடாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்