ம.யேசுதாசன். யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 1வது பதிப்பு, ஜுன் 2004. (யாழ்ப்பாணம்: சுரபி பதிப்பகம்).
xvi, 64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 955-9262-27-0.
கத்தோலிக்க கூத்துக்கள் பொதுவாக விவிலியக் கதைகளைத் தழுவியும், புனிதர்களின் வேதசாட்சிகளின் வரலாற்றைக் கொண்டும், அறநெறி உணர்த்தும் கற்பனைக் கதைகளைக் கொண்டும் படைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் விவிலியத்தில் பழைய ஏற்பாட்டில் உள்ள தோபியாஸ் ஆகமத்தின் தோபியாசின் வரலாற்றை இக்கூத்து பாடுபொருளாகக் கொண்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33378).