11385 மட்டக்களப்பு வசந்தன் கவித்திரட்டு.

தி.சதாசிவ ஐயர் (தொகுத்துப் பரிசோதித்தவர்). மட்டக்களப்பு: D.E.கணபதிப்பிள்ளை, தலைவர், மட்டக்களப்பு தெற்கு தமிழ் ஆசிரியர் சங்கம், 1வது பதிப்பு, 1940. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

xlvi, 111 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 1.00, அளவு: 20×13 சமீ.

கட்டியம் (நூலுக்குத் தோற்றுவாயாக அமைந்தவை), தோத்திரம் (தோத்திரரூபமாக அமைந்தவை), சரித்திரம் (சரித்திர சம்பந்தமானவை), தொழில் (கிராமத்தவரின் தொழிலோடு தொடர்பான பாடல்கள்), வேடிக்கை (வினோத சித்திரக் கவிகளும் நகைச்சுவைதரும் கவிகளும்), விளையாட்டு (கும்மி, ஊஞ்சல் முதலிய விளையாட்டுக்கவிகள்) ஆகிய ஆறு பிரிவுகளில் தொகுக்கப்பட்டுள்ள பாடல்களைக் கொண்ட நூல். இப்பாடல்கள் வரிக்கூத்துப் பாடல் வகையைச் சேர்ந்தவை. மட்டக்களப்புப் பிரதேசத்தில் வழங்கிவரும் இப்பாடல்களை அம்மக்கள் வசந்தன் அல்லது வயந்தன் என்றே வழங்குவர். இந்நூலில் 62 வசந்தன்கள் திரட்டிச் சேர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வசந்தன் பற்றியும் விசாரித்தறிந்த செய்திகள் அதனதன் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2429).

மட்டக்களப்பு வசந்தன் கவித்திரட்டு.

தி.சதாசிவ ஐயர் (தொகுத்துப் பரிசோதித்தவர்), பாஸ்கரன் சுமன் (பதிப்பாசிரியர்).

கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 2வது பதிப்பு, 2020, 1வது பதிப்பு, 1940 (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xxii, 138 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 800., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-687-8.

மட்டக்களப்பில் வழங்கும் நாட்டார் கலையம்சங்களில் வசந்தன் கூத்தும் ஒன்று. அக்கூத்தாட்டத்தின் போது  பாடப்படும் பாடல்கள் கிழக்கிலங்கை முழுவதும் பரவிக் காணப்படுகின்றன. அப்பாடல்களை வசந்தன் கவி எனப் பொதுப்பட அழைக்கும் மரபொன்றும் உண்டு. காலமாற்றத்தால் வசந்தன் கூத்தும் வசந்தன் கவிகளும் அருகி வரும் நிலையேற்பட்டுள்ளது. இத்தகைய நிலையினை முன்னரே உணர்ந்துகொண்ட நூலாசிரியர் அக்கவிகளைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டார். கிழக்கிலங்கையின் பல்வேறு கிராமங்களில் இருந்தும் கிடைத்த வசந்தன் பாடல்களின் ஏட்டுப் பிரதிகளை அதாரமாய்க் கொண்டு, 62 வகையான பாடல்களை வசந்தன் கவித்திரட்டுஎன்னும் திரட்டித் தந்துள்ளார். இந்நூலில் கட்டியம் (நூலுக்குத் தோற்றுவாயாக அமைந்தவை), தோத்திரம் (தோத்திரரூபமாக அமைந்தவை), சரித்திரம் (சரித்திர சம்பந்தமானவை), தொழில் (கிராமத்தவரின் தொழிலோடு தொடர்பான பாடல்கள்), வேடிக்கை (வினோத சித்திரக் கவிகளும் நகைச்சுவைதரும் கவிகளும்), விளையாட்டு (கும்மி, ஊஞ்சல் முதலிய விளையாட்டுக்கவிகள்) ஆகிய ஆறு பிரிவுகளில் தொகுக்கப்பட்டுள்ள பாடல்களைக் கொண்ட நூல். இப்பாடல்கள் வரிக்கூத்துப் பாடல் வகையைச் சேர்ந்தவை. மட்டக்களப்புப் பிரதேசத்தில் வழங்கிவரும் இப்பாடல்களை அம்மக்கள் வசந்தன் அல்லது வயந்தன் என்றே வழங்குவர். இந்நூலில் 62 வசந்தன்கள் திரட்டிச் சேர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வசந்தன் பற்றியும் விசாரித்தறிந்த செய்திகள் அதனதன் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளன. (முன்னைய பதிப்பிற்கான  நூல்தேட்டம் பதிவிலக்கம் 11385).

ஏனைய பதிவுகள்

Usa Online Casinos

Content Online Slots Deposit Match Bonuses: black diamond slot free spins The Largest Slot Win Learn More With Our Game Guides Problem Gambling Support For

13991 ஈழத்தாயைச் சந்தித்த ஈர நினைவுகள்.

க.பத்மா. சென்னை 600012: ஜெய்ஹிந்த் பதிப்பகம், இல. 16, காவலர் குடியிருப்பு, பட்டாளம், பெரம்பூர் பேரக்ஸ் சாலை, 1வது பதிப்பு, 2015. (தஞ்சாவூர் 613 005: குழந்தை இயேசு பிரின்டர்ஸ், மாதாக்கோட்டை சாலை). xxiv,