11386 மர்மத் தளபதி: புனித செபஸ்தியார் நாட்டுக்கூத்து.

எஸ்.ஏ. மிராண்டா. மன்னார்:  பேசாலை பல்கலைக்கழக மாணவர் அமைப்பு, பேசாலை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2002. (சில்லாலை: ஜே.எஸ்.பிரின்டர்ஸ் மற்றும் கொழும்பு: ட்ரான்சென்ட் பிரின்டர்ஸ்).

xii, 72 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×15 சமீ., ISBN: 955-8771-00-7.

புனித செபஸ்தியார் (இறப்பு சுமார். 288) என்பவர் ஆதி கிறித்தவ புனிதரும் மறைசாட்சியும் ஆவார். இவர் உரோமைப் பேரரசன் தியோக்கிளேசியன் கிறித்தவர்களுக்கு எதிராகத் துவங்கிய கொடுமைகளின் காரணமாக இறந்தார். இவர் பெரும்பான்மையாக மரத்திலோ, தூணிலோ கட்டப்பட்டவாறு, அம்புகளால் குத்தப்பட்டு ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டாலும், இவர் அங்கு இறக்கவில்லை. இவரை அங்கிருந்து உரோம் நகரின் ஐரீன் என்பவர் காப்பாற்றி குணப்படுத்தினார். இதன் பின்பு தியோக்கிளேசியனின் செயல்களை இவர் சாடியதால், அரசனின் ஆணைப்படி இவரை தடியால் அடித்துக் கொலை செய்தனர். இவரின் மறைசாட்சியம் முதன் முதலில் நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த அம்புரோசு என்னும் மிலன் நகர ஆயரின் திருப்பாடல் 118இன் மறை உரைகளில் (எண் 22) காணக்கிடைக்கின்றது. இதன் படி செபஸ்தியாரின் பக்தி மிலன் நகரின் 4ஆம் நூற்றாண்டிலேயே இருந்துள்ளது தெரிகின்றது. கத்தோலிக்க திருச்சபையில் இவரின் விழா நாள் சனவரி 20. கிழக்கு மரபுவழி திருச்சபைகள் இவரின் விழாவை டிசம்பர் 18இல் சிறப்பிக்கின்றன. புனித செபஸ்தியாரின் வாழ்க்கை வரலாற்றுப் பகுதியொன்றினை நாட்டுக்கூத்து இலக்கியமாக நூலுருவில் ஆசிரியர் வழங்கியிருக்கிறார். ஆசிரியர் மிராண்டா பேசாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆசிரியப் பணியாற்றியவர். (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 84880). 

ஏனைய பதிவுகள்

14482 அரச கணக்கியல் தொழில்நுட்பவியலாளருக்கான கற்பித்தல் கைநூல்.

கணக்கியல் பயிற்சிப் பிரிவு. கொழும்பு: நிதி அமைச்சு-ஆசிய அபிவிருத்தி வங்கி, மனித வள அபிவிருத்தி, 2வது பதிப்பு, ஜுன் 1998, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1994. (கொழும்பு: குளோப் பிரின்டிங் வேர்க்ஸ்). (2), 121