ஸி.வி.வேலுப்பிள்ளை. கொழும்பு 3: மாவலிப் பிரசுரம், 618, 3ஃ3, காலி வீதி, 1வது பதிப்பு, 1976. (கொழும்பு 12: சுதந்திரன் அச்சகம்).
x, 78 பக்கம், விலை: ரூபா 3.00, அளவு: 17×12 சமீ.
மலையக இலக்கியத்தின் முன்னோடியாகக் கருதப்படும் ‘மலையக மக்கள் கவிமணி’ சி.வி. வேலுப்பிள்ளை ஆசிரியர், இதழாளர், கவிஞர், நாவலாசிரியர், தொழிற்சங்கத் தலைவர், அரசியல் செயற்பாட்டாளர், களப் போராளி, எழுத்தாளர் எனப் பன்முக ஆளுமையாகத் திகழ்ந்தவர். இலங்கையில் வட்டக்கொடை பூண்டுலேயா பகுதியைச் சேர்ந்த மடக்கொம்புர தோட்டத்து பெரியக் கங்காணி கண்ணப்பன் வேலு சிங்கம் – தெய்வானையம்மாள் ஆகியோருக்கு 14.09.1914 அன்று மகனாகப் பிறந்தவர் சி.வி. வேலுப்பிள்ளை. இவரது முழுப்பெயர் கண்ணப்பன் வேலுசிங்கம் வேலுப்பிள்ளை என்பதாகும். அட்டன் மெதடிஸ்ட் கல்லூரி, நுவரெலிய புனித கிருத்துவக் கல்லூரி, கொழும்பு நாளந்தா வித்தியாலயம் முதலியவற்றில் கல்வி பயின்றார். கொழும்பு நாளந்தா வித்தயாலயம், பூண்டுலேயா தாகூர் பாடசாலை, தலவாக்கலை சுமண வித்தியாலயம், அட்டன் மெதடிஸ்ட் கல்லூரி முதலியவற்றில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
மலைநாட்டு மக்கள் கல்வி கற்பது ஆபூர்வமாயிருந்த காலத்திலேயே கல்வி கற்று ஆசிரியராகப் பணி புரிந்தவர் சி.வி. வேலுப்பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது. மலையக மக்கள் பாடல்களைத் தேடித்தொகுத்து இங்கு இலக்கியமாக்கியுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2481).