11390 வாய்மொழி இலக்கியம் (நாட்டுப் பாடல்கள்).

நாட்டுப்பாடல் நடன நாடகக் குழு. யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணப் பிரதேசக் கலைமன்றம், 1வது பதிப்பு, தை 1961. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச அச்சகம்).

xvi, 51 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 18×12 சமீ.

யாழ்ப்பாணப் பிரதேசக் கலைமன்றத்தின் முதலாவது பிரசுரமாக வெளிவந்துள்ள நூல் இது. இதில் கண்டீரோ கண்மணியை, என் செய்வாய் பெண் பனையே, திருக்கைக் கலியாணம், சீலாக் கலியாணம், உடையார் உடைந்தார், அவல் இடித்தல், பறங்கியர் காலத்துப் பாடல்கள், காகமுந் தாகமும், காகமும் சகுனமும், காகத் தூது, பட்சிகளை வினாவுதல், பிரிவாற்றாமை, துணை தேடுதல், பிறந்த அகம் போன பெண், மைத்துனன் மைத்துனி மணம், புத்தி அறிதல், யானையின் அட்டூழியம், எண்ணெய்ச் சிந்து, கப்பற்பாட்டு, ஒரு கூட்டம் ஆண்களும் பெண்களும், ஒப்பாரி, கொடும்பாவி இழுத்தல், அருவிவெட்டுப் பாடல் ஆகிய 23 தலப்புகளில் ஈழத்து நாட்டுப் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணப் பிரதேசக் கலைமன்றமானது ம.ஸ்ரீகாந்தா அவர்கள் யாழ்ப்பாண அரசாங்க அதிபராக இருந்த வேளையில் அவரைத் தலைவராகவும், கலைப்புலவர் க.நவரத்தினம் அவர்களை பொதுச் செயலாளராகவும், சு.சத்தியலிங்கம் அவர்களை உதவிச் செயலாளராகவும், கச்சேரிக் காரியாதிகாரி ரி.பாலச்சந்திரன் அவர்களை பொருளாளராகவும் கொண்டு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பின் உப குழுவான நாட்டுப் பாடல் நடன நாடகக் குழு முகாந்திரம் இ.பொ. இராசையாவை தலைவராகவும், க.பே.முத்தையா, ரி.தங்கராசா ஆகியோரை உபதலைவர்களாகவும் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2504).

ஏனைய பதிவுகள்

14512 திருமறைக் கலாமன்றம் எனது பார்வையில்.

பி.எஸ். அல்விறட். கொழும்பு: லங்கா பப்ளிஷிங் ஹவுஸ், திலக பிரஸ், 257, டாம் வீதி, 2வது பதிப்பு, ஜனவரி 2016, 1வது பதிப்பு, டிசம்பர் 2015. (கொழும்பு: சொப்ட் பிரின்ட்). 112 பக்கம், புகைப்படங்கள்,

Classic Slots

Content The Green Knight casino | Casino Classic: No Deposit Mega Vault Millionaire Bonus! Is Casino Classic Good? Classic Casino Games Golden Nugget Biloxi Hotel