இராசையா ஸ்ரீதரன். யாழ்ப்பாணம்: கலாபூஷணம் இ.ஸ்ரீதரன், நாச்சிமார் கோவிலடி, 1வது பதிப்பு, ஜனவரி 2015. (யாழ்ப்பாணம்: ஆகொழும்பு பிரின்டர்ஸ், காங்கேசன்துறை வீதி).
40 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 140., அளவு: 24.5×17.5 சமீ.
சின்னஞ்சிறுவர்கள் விரும்பிக் கற்றுக்கொள்ளக் கூடியவகையில் பயிற்சிகளும் பாட்டுகளும் அடங்கிய இந்நூலை திருத்திய பதிப்பாக ஆசிரியர் வெளியிட்டுள்ளார். பாலர் வகுப்பு முதல் முதலாம் தரம் வரை பயன்படுத்த ஏற்றதாக, கண்கவர் வண்ணத்தில் படங்களுடன் உயிரெழுத்து, மெய்யெழுத்து ஆயுத எழுத்துக்களால் ஆக்கப்பட்ட சொற்களைக்கொண்ட பாடல்கள், பயிற்சிகள் என்பன இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இராசையா ஸ்ரீதரன் ஊடகத்துறையில் பணியாற்றியவர். ஆன்மீகத்துறை எழுத்தாளராகவும் வில்லிசைக் கலைஞராகவும் அறியப்பட்டவர்.