11403 குழந்தைகளுக்கான மழலைச் செல்வம்: பாலர் வகுப்பு முதல் முதலாம் தரம் வரை.

இராசையா ஸ்ரீதரன். யாழ்ப்பாணம்: கலாபூஷணம் இ.ஸ்ரீதரன், நாச்சிமார் கோவிலடி, 1வது பதிப்பு, ஜனவரி 2015. (யாழ்ப்பாணம்: ஆகொழும்பு பிரின்டர்ஸ், காங்கேசன்துறை வீதி).

40 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 140., அளவு: 24.5×17.5 சமீ.

சின்னஞ்சிறுவர்கள் விரும்பிக் கற்றுக்கொள்ளக் கூடியவகையில் பயிற்சிகளும் பாட்டுகளும் அடங்கிய இந்நூலை திருத்திய பதிப்பாக ஆசிரியர் வெளியிட்டுள்ளார். பாலர் வகுப்பு முதல் முதலாம் தரம் வரை பயன்படுத்த ஏற்றதாக, கண்கவர் வண்ணத்தில் படங்களுடன் உயிரெழுத்து, மெய்யெழுத்து ஆயுத எழுத்துக்களால் ஆக்கப்பட்ட சொற்களைக்கொண்ட பாடல்கள், பயிற்சிகள் என்பன இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இராசையா ஸ்ரீதரன் ஊடகத்துறையில் பணியாற்றியவர். ஆன்மீகத்துறை எழுத்தாளராகவும் வில்லிசைக் கலைஞராகவும் அறியப்பட்டவர்.

ஏனைய பதிவுகள்

11302 ஜனநாயகமும் மனித உரிமைகளும்: கட்டுரைத் தொகுப்பு.

வி.ரி.தமிழ்மாறன். கொழும்பு 8: மதுரி மலர்வகம், பூங்கா வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2010. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14 டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). 200 பக்கம், விலை: ரூபா 400., அளவு:

8601 காலத்தின் யுத்தங்கள்: சிறுகதை மஞ்சரி.

காவலூர் எஸ்.ஜெகநாதன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: காவலூர் எஸ்.ஜெகநாதன், விவசாய ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, வைகாசி 1982. (யாழ்ப்பாணம்: தாரணி அச்சகம்). (2), 60 பக்கம், விலை: ரூபா 7.00, அளவு: 21×14