11405 தமிழ் ஏழாந்தரம்.

கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு 10: தமிழ் மொழிக் குழு, பாடவிதான அபிவிருத்தி நிலையம், கல்வி வெளியீட்டுத்திணைக்களம், 1வது பதிப்பு, 1973. (கொழும்பு: இலங்கை அரசாங்க அழுத்தகர் திணைக்களம்).

(6), 286 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

கல்வி அமைச்சின் பாடவிதான அபிவிருத்தி நிலையத் தமிழ் மொழிக் குழுவினால் திட்டமிட்டெழுதப்பட்ட பாடநூல் இது. இக்குழுவின் தலைவராக செ.வேலாயுதபிள்ளை இயங்கியுள்ளார். கா.ஜெயராஜா, ந.சண்முகநாதன், எம்.எஸ்.ஜமால், எஸ்.கே.சௌந்தரராஜா, எஸ்.மௌனகுரு ஆகியோர் நூலாக்கக் குழுவில் பணியாற்றியுள்ளனர். பழையதும் புதியதும் (மணிமேகலை, தற்கால கவிதைகள்), இயற்கையும் மனிதனும் (பூமி, மழை, மழையும் மனிதனும், காலநிலையும் மக்கள் வாழ்க்கையும்), உயிரினங்களின் உறைவிடங்கள் (குருவிகள் கூடுகட்டும் விந்தை, பறவையின் சிந்தனை, கூட்டு வாழ்க்கை), உணவும் ஊட்டமும், விளையாட்டும் பொழுதுபோக்கும் (விளையாட்டுக்கள், முத்திரை சேகரித்தல்), வாழ்வும் கலையும் (நாட்டார் பாடல்கள், தேசியப் பாடல்கள்), இங்கும் அங்கும் (குத்தில காவியம், ஒடிசி, ஷாநாமா), மனிதனும் தொழில்களும் (இறப்பர் தோட்டத்திலே, உழவுத் தொழில், வழிகோலிகள் கட்டடங் கட்டுகிறார்கள்), முன்னேற்ற முன்னோடிகள் (மார்க்கோ போலோ கண்ட ஈழமும் தமிழகமும், ஹெலன் கெல்லர், யூரி ககாரின்) ஆகிய அலகுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11212).

13A14

தமிழ் ஏழாந்தரம்.

கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு 10: தமிழ் மொழிக் குழு, பாடவிதான அபிவிருத்தி நிலையம், கல்வி வெளியீட்டுத்திணைக்களம், 3வது பதிப்பு, 1980, 1வது பதிப்பு, 1973, திருத்திய 2வது பதிப்பு, 1979. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்;).

(8), 144 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

கல்வி அமைச்சின் பாடவிதான அபிவிருத்தி நிலையத் தமிழ் மொழிக் குழுவினால் திட்டமிட்டெழுதப்பட்ட பாடநூல் இது. இக்குழுவின் தலைவராக செ.வேலாயுதபிள்ளை இயங்கியுள்ளார். கா.ஜெயராஜா, திருமதி ந.சண்முகநாதன், எம்.எஸ்.ஜமால், எஸ்.கே.சௌந்தரராஜா, எஸ்.மௌனகுரு ஆகியோர் நூலாக்கக் குழுவில் பணியாற்றியுள்ளனர். திருத்திய நூற்பதிப்புக் குழுவில் த.கனகரத்தினம், சு.வேலுப்பிள்ளை ஆகியோர் பணியாற்றியுள்ளனர். குருவிகள் கூடுகட்டும் விந்தை, காணாமற் போன குழந்தை, ஹெலன் கெல்லர், கண்ணன் என் சேவகன், வழிகோலிகள் கட்டடங் கட்டுகிறார்கள், விளையாட்டுக்கள், யூரி ககாரின், மாபெரியோன் மாண்புகள், முத்திரை சேகரித்தல், குத்தில காவியம், பூமி, அமுதூட்டும் அன்னை, மழை, மார்க்கோ போலோ கண்ட ஈழமும் தமிழகமும், மணிமேகலை, நாட்டார் பாடல்கள், ஒடிசி, நாளை நமக்கொரு காலம், அறிஞர் சித்திலெவ்வை, உழவுத் தொழில், உணவு முறைகள், கூட்டுறவு இயக்கம், பெருஞ்சேரலிரும்பொறை, வாய்மை, ஸோரப்பின் வீரமரணம், குசெலோபாக்கியாநம் ஆகிய தலைப்புகளில் பாடங்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

(இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24755. முன்னைய பதிப்பிற்கான  நூல்தேட்டம் பதிவிலக்கம் 11405).

ஏனைய பதிவுகள்

Best Lowest Put Gambling enterprises

Articles Best Minimal Deposit Gambling enterprise Internet sites Inside the Canada An informed 5 Put Gambling enterprises That have Bonuses Inside Nz Tips for Improving