தி.சதாசிவ ஐயர். சுன்னாகம்: வட-இலங்கைத் தமிழ் நூற் பதிப்பகம், 14வது பதிப்பு, பெப்ரவரி 1954, 1வது பதிப்பு, டிசெம்பர் 1939. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
viii, 126 பக்கம், விளக்கப்படம், சித்திரங்கள், விலை: ரூபா 1.60., அளவு: 21×14 சமீ.
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெரிதும் பயன்படுவதாகிய ஒரு சிறந்த கருவிநூலாக வெளிவந்துள்ளது. தமிழ்ப் பேச்சு, தமிழ்மொழி, இலங்கை, எங்கள் நாடு, ஒற்றுமை, செந்தமிழ் நாடு, உழவுத் தொழில், ஒரு கள்வனின் ஏமாற்றம், பொது நன்மை, நன்றிசெய்தல், நல்லவரும் தீயவரும், தோட்டம், மழைபெய்தல். தமிழ்நாட்டு மூவேந்தர், பிறர்க்கு உதவுதல், தொழில்கள், மகாத்மா காந்தி, ஆறு, பாப்பா பாட்டு ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 25 பாடங்கள் பயிற்சிகளாக இந்நூலில் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14799).