சின்னையா சிவனேசன். சென்னை 600078: டிஸ்கவரி புக் பலஸ், கே.கே.நகர் மேற்கு, பாண்டிச்சேரி விருந்தினர் விடுதிக்கு அருகாமை, 1வது பதிப்பு, ஜுலை 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை).
196 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 60., அளவு: 21×14 சமீ.
கனடா, டொரன்டோ தமிழ் வண் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இத்தொடர் பின்னர் கனடாவில் வெளிவரும் தங்கதீபம் பத்திரிகையில் எழுத்துருவில் பிரசுரமாகியது. அத்தொடரின் நூல் வடிவமே இதுவாகும். துறையூரான் என்ற புனைப்பெயரில் அறிமுகமாகியிருந்த இந்நூலாசிரியர் யாழ்ப்பாணம். கொழும்புத்துறை மேற்கைச் சேர்ந்தவர். கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். இந்நூலில் போர்ணியோ காடுகள், செவ்வாய்க்குச் செல்வோமா? படம் 51இன் இரகசியம், மனித ஒட்டுண்ணிகள், ஆப்பிரிக்கப் பென்குவின்கள், பூமியின் புல்வெளிகள், பயிர் வட்டங்கள், கரும்பொன், மலேரியா, F.A.S. Foetal Alchohol Syndromme, எவரெஸ்ட் சிகரப் பயணம், பூமியின் எதிர்காலம், இயற்கையா செயற்கையா சிறந்தது? பூமிக்கப்பால் உயிரினங்கள் உண்டா? ஐரோப்பாவின் துருவப் பிரதேசம், வீட்டிலுள்ள நச்சுப் பொருட்களை அகற்றும் முறை, விமானக் கடத்தல், முயவசiயெ சூறாவளியின் கதை, கூகிளின் கதை, இருளில் விமானப் பயணம், வண்ண வண்ண வண்டுகள் ஆகிய 21 விஞ்ஞான அறிவூட்டும் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுளளன. (இந்நூல் கொழும்புப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10198).