ச.சிதம்பரப்பிள்ளை. சுன்னாகம்: வட-இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 4வது பதிப்பு, 1955, 1வது பதிப்பு, 1938, 2வது பதிப்பு, 1952, 3வது திருத்திய பதிப்பு, 1953. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
vii, 236 பக்கம், விலை: ரூபா 3.00, அளவு: 18 x 12.5 சமீ.
இது யாழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரி ஆசிரியரும் கேத்திரகணிதம், பரீட்சித்தலும் புள்ளியிடுதலும், New Type Revision Exercises in Physics ஆகிய நூல்களின் ஆசிரியருமான ச.சிதம்பரப்பிள்ளை அவர்களால் எழுதப்பட்டது. ஒரு சுருக்க வழி, சுருக்குதல், அஷ்ரப் பிரயோகம், பெருக்கல், தனிச் சமீகரணங்கள், அடைப்புக்குறிகள், சயராசிகள், கழித்தல், பிரித்தல், கூட்டல்-கழித்தல்-பெருக்கல்-பிரித்தல், வாய்ப்பாடுகளை ஆக்குதல், வாய்ப்பாடுகளைப் பிரயோகித்தல், வாய்ப்பாட்டின் எழுவாய் மாற்றம், கூட்டுச் சமீகரணங்கள், பின்னங்கள், சினைகள் (பொதுச்சினை, வர்க்க வித்தியாசம், மூவுறுப்பிகள்), வர்க்க சமீகரணம், வரைபடங்கள் ஆகிய பாடங்களை இந்நூல் உள்ளடக்குகின்றது. நூலின் பாடங்களிடையே மீட்டற் பயிற்சிகளும், நூலின் இறுதியில் விடைகளும் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14076).