அருண பண்டார ரணதுங்க (ஆங்கில மூலம்), எம்.எச்.எப்.பலீலா இக்பால் (தமிழாக்கம்). மெனிக்ஹின்ன: AB Publishers, இல. 144, நாபான, 1வது பதிப்பு, ஜனவரி 2013. (மாத்தளை: ஸல்காலிங்க் ஓப்செட் பிரின்டர்ஸ், இல. 10, பிரதான வீதி).
172 பக்கம், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ. ISBN:978-955-0753-17-8.
இந்நுல் புதிய கலைத்திட்டத்தின் பொது இரசாயனத்தின் அலகு 1, அலகு 2 ஆகியவற்றில் உள்ள விடயப் பரப்பை உள்ளடக்கிய அடிப்படைப் பயிற்சிகளாகும். அடிப்படை எண்ணக்கருக்கள், கதோட்டு கதிர்களும் அவற்றின் இயல்புகளும், அணுக்கட்டமைப்பும் உப அணுத்துணிக்கைகளும், அணுக்களால் நிறமாலைகள், அணு நிறமாலை அமைப்புக் கட்டுரை (இரண்டு இயல்கள்), சக்தி சொட்டெண்கள், சக்தி சொட்டெண்களும் அயனாக்கற் சக்தியும், அணுக்கட்டமைப்பு, அணுக்களினதும் அயன்களினதும் இலத்திரன் நிலையமைப்புகள், அயனாக்கற் சக்தியும் ஏனைய ஆவர்த்தன இயல்புகளும், மூலகங்களின் ஆவர்த்தன பாகுபாடு, இரசாயன பிணைப்புகளும் மூலக்கூற்று வடிவங்களும், மூலக்கூற்றிடை விசைகளும், சாலக ஒழுங்கமைப்பும் கலப்பாக்கமும்- விடைகள் ஆகிய 14 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் ஆர்:- 14830).