11423 அணுக்கட்டமைப்பும் ஆவர்த்தன இயல்புகளும்.

றிஸ்வான் எம். சலாஹ{தீன். உடத்தலவின்ன: House of Chemistry, 11/A கலதெனிய, உடத்தலவின்ன மடிகே, 1வது பதிப்பு, பெப்ரவரி 2014. (மாத்தளை: ஸல்காலிங்க் ஓப்செட் பிரின்டர்ஸ், இல. 10, பிரதான வீதி).

viii, 142 பக்கம், வரைபடங்கள், அட்டவணைகள், புகைப்படங்கள், விலை: ரூபா 385., அளவு: 21.5×14.5 சமீ. ISBN: 978-955-44571-1-9.

அணுக்கட்டமைப்புகள், உப அணுத்துணிக்கை பற்றிய ஆய்வுப் பரிசோதனைகள், அணு மாதிரி உரு, கதிர்ப்பு, சக்தி மட்டத்தில் இலத்திரன்களின் அமைவு, அயன்களின் உருவாக்கம், ஆவர்த்தன இயல்பு, பயிற்சி வினாக்கள், விடைவிளக்கம் ஆகிய ஒன்பது இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் ஆர்:- 14828). 

ஏனைய பதிவுகள்

10770 இன்பத் தமிழ்: வானலையில் வந்தவை.

சு.செல்லத்துரை. தெல்லிப்பழை: இணுவில்-இளவாலை திருமதி சிவகாமசுந்தரி செல்லத்துரை நான்காம்; ஆண்டு நினைவு வெளியீடு, தெல்லிப்பழைக் கலை இலக்கியக்களம், 1வது பதிப்பு, ஜுலை 2014. (கொழும்பு 13: கீதா பப்ளிக்கேஷன்ஸ்). 181 பக்கம், தகடுகள், விலை:

13443 பத்தாந் தமிழ்மலர்ப் பயிற்சி: மாதிரிகை வினா-விடைகள்.

மு.கணபதிப்பிள்ளை (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம், 213, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1969. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம்). (2), xiv, 120 பக்கம், விலை: ரூபா 3.00, அளவு: 21.5×14 சமீ. முப்பது