சுதந்த லியனகே (சிங்கள மூலம்), ஏ.எச்.எம்.மர்ஜான் (தமிழாக்கம்). பேருவளை: ஆசிரியர்கள், 21, தக்கியா வீதி, மருதானை, 1வது பதிப்பு, 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை).
viii, 200 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 360., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-53486-2-1.
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல்துறை பேராசிரியரான பேராசிரியர் சுதந்த லியனகே சிங்கள மொழியில் எழுதிய கோவை இரசாயனவியல் என்ற நூலின் தமிழாக்கத்தை வைத்திய கலாநிதி ஏ.எச்.எம்.மர்ஜான் மேற்கொண்டுள்ளார். நூலின் உள்ளடக்கத்தில் கோவை இரசாயனவியல் என்ற பதம் பயன்படுத்தப்பட்டிருப்பினும் நூலின் தலைப்பில் தொகுப்பு இரசாயனம் என்ற பதமே பயன்படுத்தப்பட்டுள்ளது. அசேதன இரசாயனம் தொடர்பாக அத்தியாவசிய அடிப்படைகளுடன் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. S-கோவை, P-கோவை (S-Block, P-Block) ஒழுங்குமுறைகள் பற்றியும் அக்கோவைகளின் மூலகங்களின் அடிப்படை இரசாயனமும் இதில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. அறிமுகம், S-கோவை மூலகங்கள், P-கோவை இரசாயனம், 14 (IVA) கூட்ட இரசாயனம், 15 (VA) கூட்ட இரசாயனம், 16 (VIA) கூட்ட இரசாயனம், 17 (VIIA) கூட்ட இரசாயனம், 18(0) கூட்ட இரசாயனம் (சடத்துவ வாயுக்களின் இரசாயனம்), H-இன் இரசாயனம், S-P கோவை மூலகங்களினதும் சேர்வைகளினதும் இயல்புகள் ஆகிய 10 அத்தியாயங்களில் இந்நூல் விரிவாகவும் எளிமையான மொழிநடையிலும் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் ஆர்:- 14171).