அருண பண்டார ரணதுங்க, றிஸ்வான் எம்.சலஹீதீன். மெனிக்ஹின்ன: AB Publishers இல. 144, நாபான, 1வது பதிப்பு, ஜனவரி 2013. (மாத்தளை: ஸல்காலிங்க் ஓப்செட் பிரின்டர்ஸ், இல. 10, பிரதான வீதி).
(7), 258 பக்கம், விளக்கப்படங்கள், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 600., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0753-12-3.
இந்நூல் க.பொ.த. உயர்தரத்திற்கான 2009ஆம் ஆண்டு திருத்தப்பட்ட 2011ஆம் ஆண்டின் புதிய பாடவிதானத்தில் உள்ள ‘சமநிலைகள்” சம்பந்தமான பாடநூலாகும். சமநிலையின் அறிமுகம், இரசாயன சமநிலை, அயன் சமநிலை, அமிலங்களும் காரங்களும், கற்றயன் பகுப்பு, அவத்தை சமநிலை ஆகிய ஆறு பாடப் பரப்புகளை இந்நூல் விளக்குகின்றது. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் ஆர்:- 13127).