அருண பண்டார ரணதுங்க (மூலம்), எம்.எச்.எப்.பலீலா இக்பால் (தமிழாக்கம்). மெனிக்ஹின்ன: AB Publishers, இல. 144, நாபான, 1வது பதிப்பு, ஜுலை 2014. (மாத்தளை: ஸல்காலிங்க் ஓப்செட் பிரின்டர்ஸ், இல. 10, பிரதான வீதி).
96 பக்கம், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 350., அளவு: 23×15 சமீ., ISBN: 978-955-0753-32-1.
க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான புதிய பாடவிதானத் திட்டத்திற்கமைவாக எழுதப்பட்ட அலகு 5 இற்கான அனுமதியளிக்கப்பட்டதொரு பாடநூல். மூல நூலாசிரியர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இரசாயனவயில்துறை விரிவுரையாளராவார். பௌதிக இரசாயனத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற இவர் ஏற்கெனவே பல நூல்களை இத்துறையில் எழுதியிருக்கிறார். இந்நூலில் வெப்பவியக்கவியலுக்குரிய அறிமுகம், வெப்பமும் சக்தியும், வெப்ப உள்ளுறை, வெப்ப உள்ளுறையின் கூட்டுத்தொகைக்குரிய எசுவின் விதி, வெப்ப உள்ளுறை சக்கரங்கள், வெப்ப உள்ளுறை வரிப்படங்கள், பிணைப்பு வெப்ப உள்ளுறை , போர்ண் ஏபர் சக்கரங்கள், எந்திரப்பி, வெப்பவியக்கவியல்- பல்தேர்வு வினாக்கள், வெப்பவியக்கவியல் – கட்டுரை வினாக்கள் ஆகிய வியடங்கள் 11 இயல்களில் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 67565).