11433 பிறப்புரிமையியல்.

சுபாலினி இளங்கோ, தனுஜா செல்வராஜா, வைத்திலிங்கம் அருள்நந்தி. மட்டக்களப்பு: நூலாசிரியர்கள், கிழக்குப் பல்கலைக்கழகம், செங்கலடி, 1வது பதிப்பு, ஐப்பசி 2013. (மட்டக்களப்பு: துர்க்கா அச்சகம், கொக்குவில், கி.மா).

v, 284 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், புகைப்படங்கள், விலை: ரூபா 750., அளவு: 24×17 சமீ., ISBN: 978-955-44964-0-8.

பிறப்புரிமையியலானது உயிரியலின் முக்கியமான ஒரு கூறாகும். இது வரலாற்றுரீதியான கொள்கைகள் முதல் நவீன மூலக்கூற்றுப் பிரயோகங்கள் வரை பரந்த பகுதிகளைக் கொண்டிருக்கும். இப்பகுதிகளை உள்ளடக்கியதாக வெளிவந்திருக்கும் இந்நூல் பிறப்புரிமையியலின் அடிப்படை விடயமான கலக்கட்டமைப்பு தொடக்கம் தற்காலத்தில் மிகவும் முக்கியமான துறையாகக் கருதப்படும் உயிர்த் தொழில்நுட்பம், மூலக்கூற்றுப் பிறப்பரிமையியல் வரை பிறப்புரிமையியல் சார்ந்த அனைத்து விடயங்களையும் சுருக்கமாகவும் மிகத் தெளிவாகவும் விளக்கி நிற்கின்றது. இவை அனைத்தும் உயிர்க்கலம், கலவட்டம், பிறப்புரிமையியல் அறிமுகமும் வரலாறும், மென்டிலியன் பிறப்புரிமையியல், நிகழ்தகவும் கைவர்க்கச் சோதனையும், மென்டிலியன் விதியிலிருந்தான விலகல்கள், பரம்பரையலகு இணைப்பும் நிறமூர்த்தப் படங்களும், இலிங்க நிர்ணயமும் இலிங்க இணைப்பும், குடித்தொகைப் பிறப்புரிமையியல், அளந்தறி பிறப்புரிமையியல், விகாரம், கூர்ப்பு, மூலக்கூற்றுப் பிறப்புரிமையியலின் அடிப்படைகள், உயிர்த் தொழில்நுட்பவியல் பற்றிய ஒரு அறிமுகம், மரபணுப் பொறியியல், மரபணு மாற்றீட்டு உயிரினம், மரபணுச் சிகிச்சை, பிறப்புரிமைசார் ஆலோசனை வழங்கல் ஆகிய 18 அத்தியாயங்களில் விளக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பிறப்புரிமையியல்  வரலாறு, பிறப்புரிமையியலில் முக்கியமான விஞ்ஞானிகள், பிறப்புரிமையியல்-சொற்களஞ்சியம் ஆகிய பின்னிணைப்புகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் ஆர்:- 14089). 

ஏனைய பதிவுகள்

Freispiele bloß Einzahlung 2023 Fix

Content Slott Spielbank – 10 Ecu je Download ein Androide App Wieso Präsentation Online CASINOS FREE SPINS Eingeschaltet? Ordentliche Alternativen dahinter Free Spins exklusive Einzahlung