எம்.கே.முருகானந்தன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2015. (சென்னை: ஸ்கிரிப்ட் ஆப்செட்).
iv, 156 பக்கம், விலை: இந்திய ரூபா 70.00, அளவு: 18×12 சமீ.
சாதாரண மக்களுக்கும் மருத்துவ அறிவு அவசியம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தனது தொடர்ச்சியான பதிவுகளை நூல்கள் வழியாகவும், கட்டுரைகள் மூலமாகவும், இணையத்தளங்களின் வாயிலாகவும் மேற்கொண்டுவருபவர் வைத்திய கலாநிதி எம்.கே.முருகானந்தன். இந்நூலில் அவர் இலகு தமிழில் எழுதிய பயன்மிக்க 18 மருத்துவக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. காதலுக்கும் கவர்ச்சிக்கும் பயன்பட்ட உதடுகள் தற்போது குற்றவாளிகளை இனங்காண உதட்டச்சு (டுip Pசiவெ) என்ற வகையில் பயன்படுவதையும், காதலாலும் காமத்தாலும் மனிதர்கள் மாத்திரம் இறப்பதில்லை-மிருகங்கள் கூட இதனால் இறக்கின்றன என்பதை அன்ரகைனஸ் சுண்டெலிகளை வைத்தும்; புரியவைத்திருக்கிறார். மேலும் வாடகைத் தாய்மார், ஈ.சீ.கரெட், எச்.ஐ.வி. தொற்று, புற்றுநோய், மகப்பேறு, ஸ்டெம்செல் சுண்டெலிகள், மரணப்படுக்கை தரிசனங்கள், குளோணிங், உயிரியல் கணனியின் சாத்தியப்பாடு, சோதனைக் குழாய் குழந்தை உருவாக்கத்தின் தந்தை ரொபேட் எட்வேர்ட்ஸ், ஈ சிகரெட்டின் பாதுகாப்பு என பல மருத்துவம் சார்ந்த அண்மைக்கால அறிவியல் வளர்ச்சிகளையும் தமிழ் வாசகர்களுக்கு இந்நூலில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.