சி.யமுனானந்தா. யாழ்ப்பாணம்: வைத்திய கலாநிதி சி.யமுனானந்தா, மாவட்ட காசநோய்க் கட்டுப்பாட்டு அதிகாரி, மார்பு நோய்ச் சிகிச்சை நிலையம், பண்ணை, 1வது பதிப்பு, மார்கழி 2011. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டேர்ஸ், இல. 424, காங்கேசன்துறை வீதி).
vii, 89 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-54033-0-6.
காசநோய் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட இந்நூல், யாழ்ப்பாண சுகாதாரப் பகுதியின் மாவட்ட காசநோய்க் கட்டுப்பாட்டு அதிகாரியான டாக்டர் சி.யமுனானந்தா அவர்களின் மருத்துவ நூற்படைப்பாகும். காசநோய்க் களைவில் கவனிக்கப்படவேண்டிய பிரயோக மனித உரிமை அணுகல், காசநோயும் சுவாச ஆரோக்கியமும், நுரையீரலில் ஏற்படும் காசநோய,; நுரையீரல் அல்லாத பகுதிகளில் ஏற்படும் காசநோய், சிறுவர்களில் காசநோய், பெண்களில் காசநோய், காசநோயும் சலரோகமும், காசநோயும் புகைத்தலும், காசநோயும் மதுபானமும், காசநோயும் போஷாக்கும், காசநோயும் எய்ட்ஸ் நோயும், முதியவர்களில் காசநோய், மருந்திற்கு எதிர்ப்புத் தன்மையுடைய காசநோய், காசநோயினை ஆய்வுகூடங்களில் கண்டறிதல், காசநோய்க்கான சிகிச்சை, காசநோய்க் கட்டுப்பாட்டில் சுகாதார உத்தியோகத்தர்களது செயற்பாடு, காசநோய் கண்காணிப்பும் கட்டுப்பாடும் சம்பந்தமான நடவடிக்கைகளை வலுவூட்டல், காசநோய் பற்றிய விழிப்புணர்வு, காசநோய் தொடர்பான பொதுவான ஐயங்களும் அதற்கான விளக்கங்களும், காசநோய் நலன்பேணலில் சமூகத்தின் பங்கு, காசநோய் தொடர்பான சமூக மாற்றத்திற்கான விற்பனைகள், ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட இந்நூலின் இறுதியில் காசநோய் விழிப்புணர்வுப் பாடல்கள் என்ற தலைப்பில் சமூகத்துக்குச் செய்தியைக் கொண்டுசேர்க்கும் விழிப்புணர்வுப் பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நூலின் உள்ளடக்கத்தின் பெரும்பங்கைக் கொண்ட ‘காசநோய் சமூக அணுகுதல்’ என்ற தலைப்பில் ஆசிரியரின்; நூலொன்று மார்ச் 2011இல் 2வது பதிப்பாக வெளிவந்துள்ளது. இந்நூல் நூல்தேட்டம் பதிவிலக்கம் 9450இல் பதிவுக்குள்ளாகியுள்ளது.