கா.வைத்தீஸ்வரன். தெகிவளை: காயத்திரி வெளியீடு, 7, அல்பேர்ட் பிளேஸ், 1வது பதிப்பு, மார்ச் 2017. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்).
116 பக்கம், விலை: ரூபா 275., அளவு: 22.5×14.5 சமீ., ISBN: 978-955-44396-2-7.
பாரிசவாதம் தவிர்ப்போம், குணங்குறிகள், நோயை ஏற்படுத்தும் காரணிகள், நோய் நிர்ணயமும் அதற்கான சிகிச்சையும், நோயாளர் பராமரிப்பு, இயல்புநிலைக்குத் திரும்ப வழிகாட்டல், உடற்பயிற்சி தொடர்பான சிகிச்சையின் அவசியம், தொடர்பாடல்-சம்பாசிக்க ஊக்குவிப்போம், தொழில்சார் பயிற்சி, பாரிசவாத நோயாளிக்கான உணவுகள், ஆற்றுப்படுத்தல் அல்லது வழிகாட்டலின் அவசியம், நீண்டகாலப் பராமரிப்பு, நோய் தொடர்பான சமூகக் கண்ணோட்டம், நோயைத் தடைசெய்வதில் அப்பியாசத்தின் பங்கு, தாவர உணவின் சிறப்பு, ஆகிய 15 அத்தியாயங்களில் பாரிசவாதம் பற்றிய இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்பாக உடற்பருமன் தவிர்ப்போம்-சுயமதிப்பீடு, பாரிசவாதத்தின் தாக்கம் (Case Study), இதயத்தைப் பாதுகாத்தலில் நடத்தலின் பங்கு, ஆசிரியரின் ஏனைய நூல்களின் பட்டியல் என்பன இணைக்கப்பட்டுள்ளன. நலவியல் துறையில் முதிர் அனுபவம் பெற்ற நூலாசிரியர் ஓய்வுபெற்ற சுகாதாரக் கல்வியாளராவார். ஆற்றுப்படுத்தலில் நீண்டகால அனுபவம் உள்ளவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61885).