11442 புற்று நோய்: பல உடல் உறுப்புகளைப் பாதிக்கும் ஒரு நோய்.

 வீ.கே.கணேசலிங்கம். பருத்தித்துறை: இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், யாழ்ப்பாணக் கிளை, பருத்தித்துறை பிரிவு, 1வது பதிப்பு, 2013. (யாழ்ப்பாணம்: ஜெயஸ்ரீ அச்சகம், 34, பிரவுண் வீதி).

120 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-1264-14-7.

முகவுரை, அணிந்துரை ஆகியவற்றைத் தொடர்ந்து, இந்நூலில் புற்றுநோய், புற்றுநோய் கலங்களில் பரவும் முறை, புற்றுநோய்க் கலங்களினால் எற்படும் கட்டமைப்புகள், புற்றுநோய்க் கலங்களின் வளர்ச்சி, முக்கிய புற்றுநோய்கள், புற்றுநோயுடன் சேர்ந்த வரும் அறிகுறிகள், புற்றுநோய் வருவதற்கான காரணிகள், புற்றுநோய்க்கான மருத்துவப் பரிசோதனைகள், புற்றுநோயைக் கட்டுப்படுத்துவது எப்படி? புற்றுநோய் வராது தடுப்பது எப்படி? புற்றுநோய் வருவதற்கான இரசாயன வஸ்து காரணிகள், புற்றுநோயாளிகளுக்குச் சமூக சேவை, புற்றுநோயைத் தடுக்கும் மூலிகைகள், புற்றுநோயும் வாழ்க்கைப் பழக்கங்களும், புற்றுநோயைக் கண்டறிதல், புற்றுநோயாளருக்கான உடனடி நடவடிக்கைகள், புற்றுநோய் பல தன்மைகளைக் கொண்டது, புற்றுநோய் ஆராய்ச்சிகள், ஆகிய 18 அத்தியாயங்களில் புற்றுநோய் பற்றிய விரிவான விளக்கம் தரப்பட்டுள்ளது. இறுதியாக ஆங்கிலத்தில் சுருக்க விளக்கமும் ஆதார நூல்களின் பட்டியலும் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் ஆர்:- 14780). 

ஏனைய பதிவுகள்