வீ.கே.கணேசலிங்கம். பருத்தித்துறை: இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், யாழ்ப்பாணக் கிளை, பருத்தித்துறைப் பிரிவு, 1வது பதிப்பு, 2014. (யாழ்ப்பாணம்: குரு அச்சகம், திருநெல்வேலி).
74 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 400., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-1264-15-4.
இந்நூலில் முன்னுரை, மறதிநோய் (Dementia) தொடர்பாக உலக சுகாதார வரையறை, இவ்வியாதி யாரைப் பீடிக்கும்? இவ்வியாதியின் அறிகுறிகள் (ஞாபகமறதி, தொடர்பாடல் கஷ்டங்கள், நடத்தையிலும் மனநிலையிலும் மாற்றங்கள்), மறதி வியாதி தோன்றுவதற்கான ஏதுநிலைகள், இந்நோயினைத் தடுப்பதற்கான வழிகள், இவ்வியாதியினால் ஏற்படும் தாக்கங்கள், இந்நோயை மதிப்பிடுவது எப்படி? இந்நோயைத் தீர்ப்பதற்கான மருத்துவம், இந்நோயாளர்களைப் பராமரிப்பது எப்படி? மறதி நோயை ஏற்படுத்தும் மூளையின் பாகங்கள், இந்நோய் தோன்றுவதற்கு மூளையில் ஏற்படும் கட்டமைப்பு மாற்றம், இந்நோய் உண்டாவதற்கான வேறு காரணங்கள், பல்வேறு விதமான மறதிநோய், பல்வேறு மறதி நோய்களின் விரிவான விவரணம், நிறைவுரை ஆகிய 16 இயல்களில் மறதிநோய் பற்றிய விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இறுதியாக ஆங்கிலத்தில் சுருக்க விளக்கமும் ஆதார நூல்களின் பட்டியலும் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் ஆர்:- 14781).