11446 சுகம் தரும் உணவும் சுகமான வாழ்வும்.

ஏ.ஜி.யோகராஜா (தொகுப்பாசிரியர்). சுவிட்சர்லாந்து: யோகாம்பிகை எழுத்தகம், Rumiweg 40, 4900 Langenthal, 1வது பதிப்பு, டிசம்பர் 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(4), 56 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×14 சமீ.

யாழ்ப்பாண மாவட்டத்தின் அல்வாய் வடக்கைச் சேர்ந்த அமரர் காசிநாதர் முருகதாஸ் அவர்களின் நினைவாக வெளியிடப்பட்டுள்ள நூல். அன்னார் பற்றிய நினைவுக் குறிப்புகளுடன், தமிழகத்தின் பவித்ரா இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை  வைத்தியர் ஆர்.சுப்பிரமணியன் அவர்கள் எழுதிய எல்லோருக்கும் இனிய இயற்கை மருத்துவம் என்ற நூலின் சில பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு சுகம் தரும் உணவும் சுகமான வாழ்வும், இயற்கையும் மனிதனும், உணவு உட்கொள்ளும் முறை, தண்ணீர் எனும் இலவச உணவு அனைத்து வகையான நோய்களுக்குமான முக்கிய மருந்து, மிளகு-சீரகத் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள், மனித உணவில் கனிகளின் பங்கு, மனித உணவில் காய்களின் பங்கு, மனித உணவில் கீரைவகைகளின் பங்கு, சர்க்கரை நோயைக் குணப்படுத்துவதில் கனிகளின் பங்கு, ஆரோக்கிய வாழ்விற்கு விரதத்தின் முக்கியத்துவம், காய்ச்சல் ஒரு நோய் அல்ல, சளியை அகற்றும் இயற்கை மருத்துவம், தலைவலியைத் தவிர்ப்பதற்கு மாத்திரைகளைத் தவிர்க்கவேண்டும், இரத்த அழுத்தத்தை குணப்படுத்துவது, எண்ணெய் மருத்துவம், எனிமா தரும் இனிமை, உடல் ஆரோக்கியத்தில் களிமண்ணின் பங்கு, இயற்கை மருத்துவத்தில் சூரியனுக்கு முக்கியத்துவம், ஆகிய தலைப்புகளில் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Alice im Wunderland Wikipedia

Content Vortragen Eltern Adventures Within Wonderland verbunden ferner tippen Die leser über Kunden, nachfolgende einen Artikel respektiert sehen, hatten untergeordnet beliebt North America Eine weitere

14347 குழந்தைகளை வளர்க்காதீர்கள் வளரவிடுங்கள்.

எஸ்.குருபாதம். சென்னை 600098: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத் தூர், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2018. (சென்னை 14: பாவை பிரின்டர்ஸ், 16 (142), ஜானி ஜான்கான்