புவனேஸ்வரி லோகநாதன். வவுனியா: பிரயோக விஞ்ஞான பீடம், வவுனியா வளாகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2007. (அனுராதபுரம்: எஸ்.எஸ். பிரின்டர்ஸ், Fair Road).
(2), vi, 97 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், புகைப்படங்கள், விலை: ரூபா 400., அளவு: 28×21 சமீ., ISBN: 978-955-50741-0-0.
இந்நூல், வீட்டுத் தோட்டம் மனிதனது அன்றாட உணவுத் தேவையில் எவ்வளவு பங்களிப்பைச் செய்கின்றது, எவ்வாறு நீர்வளம், நில வளம், வனவளம், உயிர் இனங்கள் பாதுகாக்கப்படுகின்றன, வீடுகளில் உருவாகும் பிரிகையடையக்கூடிய கழிவுப் பொருள்கள் எவ்வாறு மண்வளத்தைக் கூட்டும் பசளையாக மாற்றலாம் என்னும் பல தத்துவங்களை உள்ளடக்கியுள்ளது. இந்நூலை வாசிப்பதன் மூலம் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னால் இயன்றவாறு எவ்வாறு சூழல் மாசடைவதைத் தடுக்கலாம் அல்லது குறைக்கலாம் என அறிந்துகொள்ள இந்நூல் உதவுகின்றது. சுற்றாடல் மாசு அடையும் வழிகளும் சுற்றாடல் பாதுகாப்பும், மண்ணும் மண்பாதுகாப்பும், காடு அழிப்பின் தாக்கமும் காடு பாதுகாப்பும், உயிரினங்களின் பன்னிலைத் தன்மையும் அதன் பாதுகாப்பும், சேதனப் பயிர்ச் செய்கையின் முக்கியத்துவமும் சேதனப் பசளையும், சுற்றாடல் பாதுகாப்பில் வீட்டுத் தோட்டத்தின் முக்கியத்துவம், நிலையான அபிவிருத்தியும் வீட்டுத் தோட்டமும் ஆகிய ஏழு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 58095).