வி.ரவீந்திரராஜா. வவுனியா: வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி, பூந்தோட்டம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2008. (வவுனியா: ஆகாஷ் கிராபிக்ஸ், இல. 111, பஸ் நிலைய மேல்மாடி).
78 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் மனைப் பொருளியல் மன்றத்தின் போஷகரான ஆசிரிய கல்வியியலாளர் திருமதி ரவீந்திரராஜாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள சிறப்பு மலர் இது. இம்மலரில் சிறப்பு ஆக்கங்களாக, மனையில் மனையாளின் வகிபாகம், மனைப்பொருளியலின் முக்கியத்துவம், மனைப் பொருளியல் பாடத்தின் நோக்கங்கள், மனைப் பொருளியல் பாடத்தில் கணிப்பீடு, மதிப்பீடு பற்றிய கண்ணோட்டம், கால நிர்வாகம், ஆரோக்கியத்தில் ஆன்மீகத்தின் பங்கு, என் அன்னை, மனக்கவலை ஆரோக்கியத்தின் எதிரி, இனிப்பு வகை, தாய்மார்களே குழந்தையிடம் அன்பை வெளிப்படுத்தி வளர்ப்பில் வெற்றிகாணுங்கள், கர்ப்ப காலத்தில் ஓய்வும் உடற் பயிற்சியும், மருத்துவத்திற்கு உதவும் 3னு மொடல்கள், ஒரு மகனின் பார்வையில் தந்தையின் நிலை, கொழுப்பு நண்பனா பகைவனா?, உயர் குருதி அமுக்கம், இசையும் அசைவும், நீர்ப்பீடனம், தையல் கலை, இரவு உடை தயாரிப்போம், இனிமையான பொழுது போக்குகள், சுவர்மாட்டி செய்து பார்க்கலாமே, யோகாசனமும் அதன் முக்கியத்துவமும், உணவுத் தொழில்நுட்ப 1ம் 2ம் வருட ஆசிரிய மாணவர்கள் விபரம், இவ்வருடத்திற்கான செயற்பாடுகள், மனையியல் தின விழாவை ஒட்டி நடாத்தப்பட்ட கல்லூரி சமூகத்திற்கிடையிலான போட்டியில் வெற்றிபெற்றவர்கள் விபரம், போட்டியில் கலந்துகொண்டவர்களின் எண்ணவகைகள் சில ஆகியவை இடம்பெற்றுள்ளன.