நிலோஜினி விஜேந்திரன். மட்டக்களப்பு: Better Way Publication, பிரிவு, திராய்மடு, கொக்குவில், 1வது பதிப்பு, மார்ச் 2015. (யாழ்ப்பாணம்: சுடர் நிலவு கிரபிக்ஸ், இணுவில்).
vi, 114 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 24×17.5 சமீ., ISBN: 978-955-
ஆசிரியர் கைநூல், மனைப்பொருளியல் பாடநூல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தரம் பத்தின் மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சியான வாழ்க்கைச் சூழல், மனை வளங்கள், உணவும் போசணையும், உணவு வேளைகளைத் திட்டமிடல், உணவின் தரப்பண்பைப் பேணல், உணவை ஆயத்தப்படுத்தலும் சமைத்தலும், உணவு பரிமாறல், உணவு நற்காப்பு, போசணைக் குறைபாடுகள், தையல் முறைகள், குழந்தை ஆடை, கட்டிளமைப்பருவம், ஆரோக்கியமான மகப்பேறு ஆகிய 13 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. திருமதி நிலோஜினி விஜேந்திரன் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை அ.த.க. பாடசாலையின் ஆசிரியையாவார். (இந்நூல் கொழும்புப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 68620).