11463 கணக்குப் பதிவியல்.

சி.ந.தேவராசன். கொழும்பு: இலங்கை அரசகரும மொழித் திணைக்களம், 1வது பதிப்பு, 1956. (கொழும்பு: அரசாங்க அச்சகம்).

xii, 522 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ.

ஆரம்ப உரை, காசுக் கணக்கு, வங்கிகள், வங்கிக் கணக்கு, கழிவுகள், சரக்கு கணக்கு, பேரேடு, இலாப நட்டக் கணக்கு, மூலதனக் கணக்கு, பரீட்சை மீதி, பற்று வரவுக் குறிப்பேடு, சில்லறைக் காசேடு, ஒற்றைப் பதிவு, காசோலைகள், வியாபாரக் கணக்கு, செய்கைக் கணக்கு, மூலதனமும் வரவுசெலவும், நன்மதிப்பு, ஒதுக்கல்களும் காப்புகளும், ஆழுநிதிகள், பெறுமானத் தேய்வு, முதலீடுகள், வருமான வரி, கூட்டுறவுச் சங்கங்கள், கூட்டுறவுச் சங்கக் கணக்குகள், மணாக்கர் அறியவேண்டிய குறிப்புகள், கணக்கு வைக்கும் முறையைக் கற்பித்தல் ஆகிய அத்தியாயங்களில் கணக்குப் பதிவியல் (Book Keeping) பாடம் விரிவாகவிளக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17306).

ஏனைய பதிவுகள்